நான் சொன்ன கதைக்கு 200 கோடி பத்தாது.? மகிழ் திருமேனியால் அதிகரித்த AK 62 பட்ஜெட்.. அள்ளி கொடுத்த லைகா நிறுவனம்

AJITH
AJITH

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ நடிகர் அஜித்குமார் இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தது ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் சொன்ன கதை..

அஜித் லெவலுக்கு இல்லாமல் போனதால் படக்குழு கதையை நிராகரித்தது.  சிறு இடைவெளிக்குப் பிறகு கதையில் மாற்றம் செய்து விக்னேஷ் சிவன் சொன்னார் அந்த கதையும் சுத்தமாக பிடிக்காமல் போனதால் அவரை கைகழுவி விட்டு சஸ்பென்ஸ் மற்றும் ஆக்சன் படங்களை எடுப்பதில் கைதேர்ந்த மகிழ் திருமினியை அழைத்தது..

அவர் சொன்ன கதை படக்குழுவுக்கு ரொம்ப பிடித்து போகவே தற்பொழுது ஏகே 62 படத்திற்கு அவரை கமிட்டாக்கி உள்ளது ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை ஆனால் சினிமா வட்டாரங்கள் மத்தியில் ஏகே 62 படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி என உறுதியாக கூறுகின்றனர்.

இப்படி ஒரு பக்கம் இருக்க அண்மையில் இந்த படத்தின் பூஜை சைலண்டாக முடிந்தது எனவும் பல செய்திகள் சோசியல் மீடியாக்களில் வெளியாகின அதன் பிறகு ஏகே 62 படத்திற்கு “டெவில்”  என்ன டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிசுகிசுக்கட்டன ஆனால் இது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை..

இப்படி இருக்கின்ற நிலையில் ஏகே 62 படத்திற்கு மொத்தம் 220 கோடி பட்ஜெட் லைக்கா நிறுவனம் ஒதுக்கி இருந்ததாம் ஆனால் மகிழ்திருமேனி சொன்ன கதையில் முழுக்க முழுக்க ஆக்சனுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்ததால் பட்ஜெட் ஏறும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து லைகா நிறுவனமும் பட்ஜெட்டை கொஞ்சம் அதிகரித்துள்ளதாம்.. பட்ஜெட்டில் 50 கோடி சேரும் என சொல்லப்படுகிறது. இதனால் படக்குழு சந்தோஷ்துடன் வேலையை ஆரம்பிக்க உள்ளதாம். 5 அல்லது 6 மாதத்தில் மொத்த ஷூட்டிங் முடியும் என கணக்கு போட்டு உள்ளது.