தமிழ் சினிமா உலகில் இருக்கும் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் வசூல் வேட்டை நடத்துகின்றன அந்த வகையில் இந்த ஆண்டில் மட்டும் பல இளம் தலைமுறை நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக இருந்து வந்துள்ளது அந்த வகையில் குறிப்பாக கோமாளி படத்தை இயக்கி வெற்றி கண்ட ப்ரதீப் ரங்கநாதன்.
தற்பொழுது இயக்கி, நடித்த திரைப்படம் தான் லவ் டுடே இந்த படம் முழுக்க முழுக்க ஒரு காதல் சம்பந்தப்பட்ட திரைப்படமாக உருவாகியது இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து ராதிகா சரத்குமார், ரவீனா, சத்யராஜ் யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
படம் கடந்த நான்காம் தேதி கோலாகலமாக திரையில் வெளியானது இந்த படத்தை எதிர்த்து சுந்தர் சி யின் காபி வித் காதல் திரைப்படம் வெளியானது ஆனால் காபி வித் காதலை விட லவ் டுடே திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.
முதல் நாளில் நான்கு கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியது லவ் டுடே திரைப்படம் இரண்டாவது நாளிலும் நல்ல வசூலையே லவ் டுடே திரைப்படம் அள்ளி உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. லவ் டுடே திரைப்படம் நல்லா வரவேற்பை பெற்று இரண்டு நாள் முடிவில் மட்டுமே 7.5 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் டாப் நடிகர்கள் பலரும் ஷாக்கில் இருக்கின்றனர் ஒரு இயக்குனர் முதல் படத்தில் நடித்து இப்படி ஒரு வசூலை கொடுத்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.