தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது படங்கள் ஒவ்வொன்றும் அசால்டாக 100 கோடி 200 கோடி என வசூலை அள்ளுகின்றன. அதனால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் விஜய் வைத்து படம் பண்ண காசை வாரி இறக்கிய தயாராக இருக்கின்றனர். இப்படி இருக்க கடைசியாக தில்ராஜ் தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாகிறது.
இந்த படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி எதிர்பார்த்த அளவு வசூலை ஈட்டியது. ஆனால் விஜயின் வாரிசு திரைப்படம் சோலோவாக வெளிவந்தால் இன்னும் பல கோடி லாபம் பார்த்திருக்கும். அப்போது அஜித்தின் துணிவு திரைப்படமும் ஒன்றாக வெளியானதால் இரு படங்களிடையே கடுமையான போட்டி நிலவியது. அதனால் இரு படங்களில் வசூலும் குறைய தொடங்கியது. அதிலும் குறிப்பாக வாரிசு படத்தின் வசூல் ரொம்ப அடி வாங்கியது என்று தான் சொல்ல வேண்டும்.
அதை தொடர்ந்து தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதனால் லியோ படத்தில் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அக்டோபர் மாதம் வெளியாகும் லியோ படத்தை தொடர்ந்து அடுத்து இரு வாரங்களில் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறதாம் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் திரைப்படம் நல்ல வெற்றியடைந்து, அதிக வசூலை அள்ளியது அதேபோல் தற்போது அதன் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் உருவாகி வருகிறது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் வேகம் எடுத்துள்ளது.
மேலும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஹிந்தியில் உருவாகி வரும் ஜவான் திரைப்படமும் அக்டோபர் மாதம் வெளிவர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் லியோ படத்துடன் இந்தியன் 2, ஜவான் திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாகினால் லியோ படத்தின் வசூல் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.. இது விஜய் ரசிகர்கள் மற்றும் லியோ படக்குழுவிற்கு மிகுந்த ஏமாற்றம் ஆகிவிடும். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..