Rajini jailer: ரஜினி நடிப்பில் தமிழில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் அதற்கு போட்டியாக அதே பெயரில் மலையாள படம் ஒன்று அதே நாளில் ரிலீஸ்சாக இருக்கிறது இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் தற்பொழுது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக நெல்சன் திலீப் குமாரி இயக்கி வரும் நிலையில் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணனும் வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரும் நடித்துள்ளனர்.. இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் மேலும் தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப், மாரிமுத்து, வசந்த் ரவி, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.
இந்த படம் சிலைகள் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். அப்படி அவரது இசையமைப்பில் சமீபத்தில் காவாலா மற்றும் ஹுகூம் ஆகிய படங்கள் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. இப்படிப்பட்ட நிலையில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி அன்று ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேருஉள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
ஜெயிலர் படம் பான் இந்திய படமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இதன் காரணமாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு திரைவுலகைச் சேர்ந்த பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பெயருடன் மலையாளத்திலும் ஒரு படம் உருவாகி இருக்கிறது.

தமிழ் ஜெயிலர் பட குழுவிடம் படத்தின் தலைப்பை மாற்றி கேரளாவில் ரிலீஸ் செய்யும்படி மலையாள ஜெயிலர் டீம் வேண்டுகோள் வைத்தது. ஆனால் இதை தமிழ் ஜெயிலர் பட குழு ஏற்க்கவில்லை. இதனால் தமிழ் ஜெயிலர் படத்திற்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் தங்களது ஜெயிலர் படத்தையும் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று ரிலீஸ் செய்ய மலையாள ஜெய்லர் படக் குழு முடிவு எடுத்திருக்கிறது.
இவ்வாறு இது குறித்த தகவல் வெளியாக கேரளாவில் பரபரப்பு நிலவி வருகிறது. ஏனென்றால் இரண்டு படமும் ஒரே பெயருடன் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழ் ஜெய்லர் படத்தின் வசூலுக்கு மலையாள ஜெய்லர் படம் சிக்கலை உண்டாக்கியுள்ளது. மேலும் இதன் காரணத்தினால் சன் பிரிக்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும் இதில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.