விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் சூரியின் ஜோடியாக புஷ்பா புருஷன் என்ற டயலாக்கால் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ரேஷ்மா பசுபிலிட்டி. பிறகு தொடர்ந்து சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ரேஷ்மா மூன்றாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வருகிறது. முதலில் ரேஷ்மா ஒரு விமான பணி பெண்ணாக தான் பணிபுரிந்து வந்தார் அதன் பிறகு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமான இவர் வம்சம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
பிறகு சில திரைப்படங்களிலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவருடைய தந்தை பிரசாத் பசிபிளிட்டி அவர்கள் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகை பிக்பாஸ் சீசன் மூன்றாவது நிகழ்ச்சி தான் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசி இருந்தார்.
அதில் நான் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருந்தேன் அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது என் வயிற்றில் இருந்த குழந்தையின் இதயத்துடிப்பு நின்று இறந்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அந்த இழப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்று கண்ணீர் விட்டு கதறியபடி ரேஷ்மா கூறியிருந்தார் மேலும் ரேஷ்மாவின் முதல் திருமணம் பெற்றோர்கள் பார்த்து அவர்கள் சமூகத்துடன் நன்றாக நடைபெற்ற திருமணமாகும்.
ஆனால் சில வருடங்களிலேயே இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றுப் பிரித்து உள்ளார்கள் எனவே சில காலங்களில் இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார் எனவே தன்னுடைய கணவருடன் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார் இரண்டாவது திருமணத்திலும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்த நிலையில் விவாகரத்து செய்து விட்டதாக கூறினார்.
மேலும் அவர் டைரக்டர் நிஷாந்த் ரவீந்திரனை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது ஆனால் தற்பொழுது தனியாக தான் தனது மகன்களை பார்த்து வருகிறார் இப்படி ஒரு நிலையில் ரேஷ்மா தனது மகன் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.