தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிப்பவர் நடிகர் தனுஷ் இவர் கடைசியாக நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியை ருசிக்காத நிலையில் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான படம் திருச்சிற்றம்பலம் இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தற்போது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படம் நடிகர் தனுஷ் கேரியரில் மிகப்பெரிய ஒரு வெற்றிப் படமாக அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் மாறுபட்ட நடிப்பு தற்போது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர், ராசி கண்ணா, நித்யாமேனன் என பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளனர்.
திருச்சிற்றம்பலம் படம் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று வருவதால் இந்த படத்தை பார்க்க மக்கள் கூட்டமும் அதிகரித்து உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் எவ்வளவு முதல் நாள் வசூல் செய்தது என்பது குறித்து ஏற்கனவே தகவல் வெளியாகியது.
முதல் நாளில் மட்டுமே சுமார் 9 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்தன. எப்படி இருக்கின்ற நிலையில் இரண்டு நாட்களில் சென்னை ஏரியாவில் மட்டும் தனுஷின் திருச்சிற்றம்பலம் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம்.
இரண்டு நாள் முடிவில் சென்னை ஏரியாவில் மட்டுமே சுமார் 1.8 கோடி வசூல் செய்து உள்ளது இது மிகப்பெரிய ஒரு வசூலாக பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்தடுத்த நாள்களிலும் நல்ல வசூலை அள்ளும் என்ன தெரிய வருகிறது காரணம் பெரிய நடிகர்கள் படம் எதுவும் கிடையாது என்பதால் தனுஷின் திருச்சிற்றம்பலம் மிகப் பிரம்மாண்டமான ஒரு வசூலை அள்ளித்தான் நிற்கும் என பலரும் கூறி வருகின்றனர்.