ஜெயிலர் படத்தை தரமாக எடுக்கும் நெல்சன்..! ரஜினிக்கு நிகராக பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் நடிக்கும் 2 கேரக்டர்கள்..

jailer
jailer

இயக்குனர் நெல்சன் மற்றும் ரஜினி கூட்டணியில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் ரஜினிக்கு 169 வது திரைப்படம் ஆகும். ரஜினியின் கடைசி படமான அண்ணாத்த படம் மற்றும் இயக்குனர் நெல்சன் இயக்கிய கடைசி படமான பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை

அதனால் அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என இயக்குனர் நெல்சன் மற்றும் ரஜினி இருவருமே ஜெயிலர் படத்தில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு ஜெயில் போன்ற செட் அமைக்கப்பட்டு அதில் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன் போன்ற சிலர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு அதிக வலு சேர்க்கும் வகையில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதாம். ஆம் அந்த கேரக்டர்கள் ரஜினிக்கு நிகராக படத்தில் பேசப்படும் எனக் கூறப்படுகிறது. அவர்கள் வேறு யாரும் அல்ல..

நடிகர் ஜெய் மற்றும் தமன்னா இருவரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஜெய் மற்றும் தமன்னாவின் கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என படக் குழு சொல்லி வருகிறது. நடிகர் ஜெய் கடைசியாக பட்டாம்பூச்சி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் அதைத்தொடர்ந்து தற்போது ஜெய்க்கு ஜெயிலர் திரைப்படம் ஒரு முக்கிய படமாக அமையும் என கூறப்படுகிறது.

இதைப் போல நடிகை தமன்னாவுக்கும் சில வருடங்களாக தமிழில் பெரிதும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் தமன்னாவிற்கு ஜெயிலர் திரைப்படம் ஒரு திருப்புமுனை படமாக அமையும் என கூறப்படுகிறது.