நீயா நானா என தளபதியுடன் நடிக்க போட்டி போடும் 2 நடிகர்கள்..! ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் பஞ்சமில்லை..!

vijay-2

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இத்திரைப்படத்தை சன் பிஃசர் நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

இவ்வாறு உருவாகும் இத் திரைப்படமானது வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட போவதாக படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளார்கள். இவ்வாறு வெளிவந்த செய்தியின் மூலமாக தளபதி ரசிகர்கள் உற்சாகத்துடன் இருப்பது மட்டுமல்லாமல் இதுவரை தளபதி விஜய் இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்தது கிடையாதாம்.

அந்தவகையில் இத்திரைப்படத்தில்  தளபதி விஜய்க்கு வில்லனாக பிரபல ஸ்டைலிஷ் வில்லன் ஒருவரை நடிக்க வைக்கப் போவதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். அந்த வகையில் தற்போது தெலுங்கில் மிக பிரபலமாக இருக்கும் பல்வேறு நடிகர்களும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க போட்டி போட்டு வருகிறார்களாம்.

ஏனெனில் தளபதி விஜய் தற்போது மாசான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இந்நிலையில் இவருடைய திரைப்படத்தில் தான் நடித்து விட்டால் எப்படியாவது பிரபலம் ஆகி விடலாம் என்ற எண்ணத்தில் தான் இப்படி நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் முதலில் மகேஷ் பாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்கள்.

ஆனால் மகேஷ்பாபு தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகாத தன் காரணத்தால் தற்போது நானியிடம் வில்லனாக நடிக்க கேட்டு உள்ளார்களாம். ஆனால் நானி தரப்பில் இருந்தும் எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

nani-1
nani-1

அந்த வகையில் இந்த இரண்டு நடிகர்களுமே மிகச் சிறந்த நடிகர்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இதில் யார் முதலில் சம்மதம் தெரிவிப்பார் என்பதுதான் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.