கடந்த ஜூன் மூன்றாம் தேதி கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த விக்ரம் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை வாரிக் குவித்து வருகின்றன. இந்த படம் கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு உருவாகி உள்ளதால் தமிழை தாண்டி அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
மேலும் படத்தில் கமல்ஹாசனுக்கு இணையாக விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் போன்ற பலரும் நடிப்பில் மிரட்டி உள்ளதால் படத்தில் ஆக்ஷன் காட்சிக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. இந்தப்படத்தை லோகேஷ் தனது கனவு நாயகன் கமலஹாசனுக்காக பார்த்து பார்த்து எடுத்துள்ளார்.
அதனால் படமும் சிறப்பாக வந்துள்ளதால் படக்குழு தற்போது மிகுந்த சந்தோசத்தில் உள்ளது. மேலும் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவதால் கமலஹாசன் படக் குழுவில் உள்ள நடிகர்கள் இயக்குனர்கள் என அனைவருக்கும் பரிசுகளை வழங்கி வருகிறார். படம் வெளிவந்து இரண்டாவது வாரம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றன
நிலையில் 300 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் படம் பிரமாண்ட மைல்கல்லை கடந்த ஐந்தாவது தமிழ் படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது. இதற்கு முன் 300 கோடி ரூபாய் வசூலில் ரஜினியின் கபாலி, 2.0 எந்திரன் மற்றும் விஜய்யின் பிகில் ஆகிய படங்கள் இந்த சாதனையை செய்து இருந்த நிலையில்..
ஐந்தாவது படமாக தற்போது கமலஹாசனின் விக்ரம் படமும் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இனி வரும் நாட்களிலும் விக்ரம் படம் நல்ல வசூலை அள்ளி மற்ற நான்கு படங்களையும் முந்தி டாப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.