ஹீரோ வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் சத்யராஜ் அவர்களை தொடர்ந்து அவரது மகன் நடிகர் சிபிராஜ் சினிமாவுலகில் ஹீரோவாக கால்தடம் பதித்து ஓரளவு வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் தனக்கான இடம் அங்கீகாரமாக கிடைக்காததால் தற்போது வரை போராட வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வந்த “கபடதாரி” படம் ஓரளவு அவருக்கு நல்லதொரு இமேஜை பெற்றுக்கொடுத்த நிலையில் அடுத்த அடுத்த ஓரிரு திரைப்படங்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார் இப்படி இருக்கின்ற நேரத்தில் திடீரென அவர் குறித்து ஒரு சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது வெள்ளித்திரையையும் தாண்டி சிபிராஜ் அவர்கள் சின்னத்திரையில் ஒரு முக்கிய சீரியலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இச்செய்தியே தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது தீரன் சின்னமலை வரலாற்று சிறப்புமிக்க சீரியல் ஒன்று உருவாக இருக்கிறதாம் அதில் தான் சிபிராஜ் “தீரன் சின்னமலை” கதா பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியயப்படவில்லை.
ஒரு ஹீரோ இவ்வாறு செய்வது தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பணியாற்றும் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.