1978 rajini movie list : நடிகர் ரஜினி சூப்பர் ஸ்டார்ராக அன்றிலிருந்து இன்று வரை கோடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர் இந்த திரைப்படத்தை நெல்சன் அவர்கள் இயக்கியிருந்தார் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரஜினிக்கு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியாக அமைந்தது.
இந்த ஒரு திரைப்படத்தையே மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் ரஜினி ஒரே வருடத்தில் 21 திரைப்படங்கள் நடித்து மிரட்டியுள்ளார் அதில் பல திரைப்படங்கள் ஹிட் திரைப்படங்களாக அமைந்துள்ளன.
1978 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின அதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களும் அடங்கும் அந்த வகையில் தமிழில் சங்கர் சலீம் சைமன், ஆயிரம் ஜென்மங்கள், மாங்குடி மைனர், பைரவி, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, சதுரங்கம், வணக்கத்துக்குரிய காதலியே, முள்ளும் மலரும், இறைவன் கொடுத்த வரம், தப்பு தாளங்கள், அவள் அப்படிதான், தாய் மீது சத்தியம், என் கேள்விக்கு என்ன பதில், பாவத்தின் சம்பளம், ஜஸ்டிஸ் கோபிநாத், பிரியா, என 15 தமிழ் திரைப்படங்களும்.
Kiladi Kittu, Maathu Tappada Maga, Thappida Thala, Priya என 4 கன்னட திரைப்படங்களும், Annadammula Savaal,Vayasu Pilichindi என இரண்டு தெலுங்கு திரைப்படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார் மொத்தம் 21 திரைப்படத்தில் நடித்து மிரட்டி இருந்தார் இதில் பிரியா திரைப்படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவானது . இன்று வரை இந்த சாதனையை எந்த ஒரு நடிகரும் முறியடிக்க முடியாத சாதனையாக பார்க்கபடுகிறது.
இன்று உள்ள நடிகர்கள் ஒரு திரைப்படத்தையே ஒரு வருடம் இரண்டு வருடம் என நடித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஒரு காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரே வருடத்தில் 21 திரைப்படங்கள் நடித்து அசத்தியுள்ளார்.