சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இது மக்கள் பலரின் ஃபேவரட் நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த பிக் பாஸ் சீசன் சீசன் ஆக நடந்து வருகிறது தற்போது கூட பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அசீம், அமுதவாணன், விக்ரமன், மணிகண்டன், ஆயிஷா, மைனா நந்தனி, ரக்ஷிதா, ஜனனி, சிவின், தனலக்ஷ்மி மற்றும் இன்னும் சில போட்டியாளர்கள் என மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஒவ்வொரு வார நாமினேஷனிலும் ஒரு ஒரு போட்டியாளராக வெளியேறினர் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற்றது அதில் ராம் மற்றும் ஆயிஷா இரண்டு போட்டியாளர்களும் வெளியேறினர். தற்போது பிக் பாஸ் வீட்டில் விக்ரமன், ரக்ஷிதா, மைனா நந்தினி, அசீம், அமுதவாணன், தனலட்சுமி, சிவின், ஜனனி, கதிர், மணிகண்டன், ஏடிகே போன்ற போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
60 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி கட்டம் நெருங்க உள்ளதால் போட்டிகள் கடுமையாக இருக்கிறது மற்றும் இப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கின்ற போட்டியாளர்களில் யார் டைட்டில் வின் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து பத்து வாரங்கள் கடந்துள்ளது ஆனால் இந்த பிக் பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளர் மட்டும் இதுவரை நாமினேஷனில் இடம்பெறவில்லையாம்
அது வேறு யாரும் அல்ல சிவின் தான். பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் திருநங்கை போட்டியாளராக நமிதா மாரிமுத்து கலந்து கொண்டு சில காரணங்களால் சில நாட்களிலேயே வெளியேறினார். அவரை தொடர்ந்து பிக்பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் திருநங்கை சிவின்.
இவர் இதுவரை இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறார் எப்பப்போ பேச வேண்டுமோ அதற்கு கரெக்டாக பேசி தனது வேலையை சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் இவர் இதுவரை நாமினேஷனில் வரவில்லை அப்படி நாமினேஷனில் வந்தால் கூட மக்கள் மத்தியில் அதிக ஓட்டுகளை பெற்று சேவ் ஆவார். சிவின் டைட்டில் வின் செய்யக்கூட அதிக வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகின்றது.