மல்டி ஸ்டார்கள் நடிக்கும் படங்கள் சுமாராக இருந்தால் கூட ஓடிவிடும் இதை நன்கு உணர்ந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களில் குறைந்தது ஏழு, எட்டு டாப் ஹீரோக்களை நடிக்க வைத்து படங்களை அவர் எடுப்பதால் அவருடைய படங்கள் வெற்றியை பெறுகின்றன.
அந்த வகையில் கைதி, மாஸ்டர், விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தையும் எடுத்து வருகிறார். படத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் முன்னணி பிரபலங்கள் பலர் நடித்து வருகின்றனர் படத்தின் ஷூட்டிங் சென்னை, காஷ்மீர் போன்ற பல இடங்களில் எடுக்கப்பட்டு ஒரு வழியாக முடிந்தது.
அடுத்ததாக லியோ படக்குழு போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது. லியோ தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இரும்புகை மாயாவி அல்லது கைதி 2 படத்தை எடுப்பார் என பலரும் சொல்லி வந்த நிலையில் திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.
இதனால் ரஜினியும், லோகேஷும் இணைவது உறுதி என கூறப்படுகிறது இதற்கான அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும். லோகேஷ் ரஜினியை வைத்து எடுக்கும் படத்தில் சுமார் 15 ஹீரோக்கள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினியை இது போன்ற மல்டி ஸ்டார் படங்களில் அதிகமாக நடித்தது கிடையாது எனவே இதுக்கு வாய்ப்பு இல்லை என ரஜினி ரசிகர்கள் கூறுகிறார்கள். ஆனால் சூப்பர் ஸ்டாருக்கு எப்படி கதையை லோகேஷ் அமைக்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.