ஒரே ஒரு பாட்டுக்கு 15 கோடி.? தயாரிப்பாளர் தலையில் துண்டு போட வைத்த ஷங்கர்.! பிரமாண்டம்னா சும்மாவா..!

shankar
shankar

இந்திய சினிமாவில் எத்தனையோ பிரமாண்ட இயக்குனர்கள் இருந்தாலும் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் சங்கர் அதேபோல் சங்கர் இயக்கத்தில் வெளியாக்கிய திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல்  சங்கர் தான் இயக்கம் திரைப்படத்தில் ஏதாவது ஒரு பிரம்மாண்டம் இருக்க வேண்டும் என்பதற்காக பல கோடி செலவு செய்வார்.

அன்னியன் 2.0 ஆகிய திரைப்படங்களை பார்த்தாலே உங்களுக்கு புரியும் ஏனென்றால் அதில் ஒரு பாடல் காட்சிகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து உள்ளார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சங்கர் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின் ஆர்சி 15 ஆகிய திரைப்படங்களை இயக்கி வந்தார். இதில் இந்தியன் 2 திரைப்படத்தின் சூட்டிங் ஒரு சில காரணங்களால் தடை பெற்றது ஆனால் தற்பொழுது ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.

அதேபோல் ஆர் சி 15 திரைப்படத்தின் சூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டு இருப்பதால் விரைவில் முடிவடைய இருக்கிறது அதனால் rc 15 திரைப்படத்தின் சூட்டிங் மீண்டும் தொடங்க இருக்கிறார் சங்கர் ஆர் சி 15 திரைப்படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் நியூசிலாந்து நாட்டில் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுவரை சிங்கிள் டிஜிட்டல் ஒரு பாடலுக்கு செலவு செய்து வந்த ஷங்கர் தற்பொழுது டபுள் டிஜிட்டில் செலவு செய்ய இருக்கிறார் அதாவது ஒரே ஒரு பாட்டுக்காக 15 கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக இயக்க இருக்கிறாராம் இந்த பாட்டிற்கு 15 கோடி என்றதும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வாயை பிளந்து உள்ளார்களாம். இதற்கு முன் வெளியாகிய சங்கர் திரைப்படத்தில் உள்ள பாடல் காட்சியை விட மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் என்னதான் கோடி கோடியாக செலவு செய்தாலும் வெறும் ஐந்து கோடியில் படம் எடுத்து 10  மடங்கு லாபத்தை பார்த்து வருகிறார்கள் சில இயக்குனர்கள் அந்த வகையில் சமீபத்தில் வந்த லவ் டுடே திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பல மடங்கு லாபத்தை பார்த்துள்ளது. அந்த வகையில் சங்கர் திரைப்படத்திற்கு ஒரு பாட்டு 15 கோடி என்பதால் சினிமா தயாரிப்பாளர்கள் பலரும்  கதி கலங்கி இருக்கிறார்கள்.

இப்படியே போனால் ஒவ்வொரு  தயாரிப்பாளரும் தலையில் துண்டு போட வேண்டிய நிலைமை வரும் என விவரம் அறிந்தவர்கள் கூறி வருகிறார்கள்.