250 பெண்களை வரன் பார்க்க சென்ற 14 ஆயிரம் இளைஞர்கள்.! இதென்னடா பசங்களுக்கு வந்த சோதன…

Young people
Young people

பொதுவாக இளைஞர்கள் பலருக்கும் வரன் இல்லாமல் சிங்கிளாக சுற்றி வருகிறார்கள். வரன் இல்லாமல் சுற்றி வந்த இளைஞர்கள் கிட்டத்தட்ட 14,000 இளைஞர்கள் வெறும் 250 பெண்களை வரன் பார்க்க குவிந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் நாகமங்கலம் தாலுகா ஆதிசுஞ்சணகிரி தொகுதியில் அண்மையில் திருமணம் வரன் பார்க்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு இளைஞர் படையை அங்கு குவிய ஆரம்பித்தது ஆம் 250 பெண்களை வரன் பார்க்க சுமார் 14 ஆயிரம் இளைஞர்கள் குவிந்துள்ளனர்.

ஒக்கலிகா மணமக்கள் மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது இந்த திருமண வரன் நிகழ்ச்சியில் பங்கு பெற சுமார் 14000 பேர் பதிவு செய்து இருந்தனர் ஆனால் அதில் 250 பெண்கள் மட்டும் தான் பதிவு செய்துள்ளார்கள். ஆனால் இந்த 250 பெண்களை13,750 இளைஞர்கள் அங்கு குவிந்துள்ளனர் அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் மணமகள் கிடைக்காமல் இவ்வளவு இளைஞர்கள் இருக்கிறார்களா என்ற சோகமும் பலருக்கும் இருந்து வருகிறது இப்படி 250 பெண்களை வரன் பார்க்க ஏராளமான இளைஞர்கள் கூட்டம் பெண் பார்க்கும் மாநாட்டிற்கு வந்துள்ளனர் இது தொடர்பான புகைபடம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.