பிக்பாஸ் சீசன் 6 – ல் என்ட்ரி கொடுக்கும்14 போட்டியாளர்கள் – யார் யார் தெரியுமா.? உறுதியான தகவல்..

kamal
kamal

வெள்ளி திரைக்கு இணையாக சின்னதிரையும் மக்கள் மற்றும் ரசிகர்களைப் கவரும் படியான புதுப்புது சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து வருகிறது அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி சீரியல்களையும் தாண்டி அதிக ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து அசத்துகின்றன இதனால் விஜய் டிவிக்கு தான் ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர்.

அண்மையில் கூட பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜூவை வைத்து ராஜு வீட்ல பார்ட்டி என்னும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி பலருக்கும் பிடித்து போய் இருப்பதால் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்ததாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் வெளியிடுகிறது.

ஆம் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி பிக் பாஸ் சீசன் 6 வெளியாக இருக்கிறது இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார் அதற்காக அவருக்கு 75 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் ஒரு தகவல்கள் வெளி வருகின்றன. பிக்பாஸ் சீசன் 6 ல் யார் யார் போட்டியாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

என்பதை தெரிந்து கொள்ள மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிகம் ஆசைப்படுகின்றனர். ஆனால் இதுவரை பிக் பாஸ் 6 யில் எந்த எந்த போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடவில்லை ஆனால் ஒரு சில பெயர்கள் மட்டும் தொடர்ந்து அடிபடுகின்றன அதை வைத்து பார்க்கையில்..

1. ரோஷினி ஹரி பிரியன் 2. ஜி பி முத்து 3. மைனா நந்தினி 4. ராபர்ட் மாஸ்டர் 5. ஸ்ரீநிதி 6. ரவீந்தர் மகாலட்சுமி 7. ரக்ஷிதா மகாலட்சுமி 8. ஆயிஷா 9. ஷில்பா மஞ்சுநாத் 10. மோனிகா ரீச்சட் 11. தர்ஷா குப்தா 12. அர்ச்சனா 13. ஜாக்லின் 14. விசித்ரா  போன்றவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.