இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை எதிர்நோக்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. 20 ஓவர் உலக கோப்பையை எப்படி கைப்பற்றுவது அரையிறுதிக்கு செல்வது எப்படி நோக்கி அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது இந்திய அணி. காரணம் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் தோல்வியை தழுவியதால் தற்போதைய இந்திய அணி ஈக்கட்டான சுழலில் இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க இந்திய அணியையும், வீரர்களையும் விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் அணியுடன் தோற்றதால் பல பிரபலங்கள் விமர்சிக்கின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான inzamam-ul-haq இந்திய அணி முதல் போட்டியில் தோற்று இதற்கான காரணத்தை தற்போது அவர் சொல்லியுள்ளார்.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தது இதை எடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி விக்கெட்டையும் கொடுக்காமல் 17 ஓவரிலேயே 152 ரன்கள் அடித்து வெற்றியை பெற்றது. இது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய வெற்றி என்பதால் அவர்கள் கொண்டாடி வருகின்றனர் இந்த நிலையில் இந்திய அணி தோல்வி குறித்து பேசியுள்ளார் அவர் கூறியது :
இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய போது சரியான வீரர்களை தேர்ந்தெடுக்க வில்லை என்று கூறினார் அதிலும் குறிப்பாக ஆல்ரவுண்டர் ஹர்டிக் பண்டியா சமீபகாலமாக பந்து வீசவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அப்படி இருக்கும்போது அவரை இந்திய அணியில் எடுத்தது தவறு செய்துவிட்டார் கோலி எனக் இன்சமாம் உல் ஹக்.
அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை சரியான முறையில் தேர்ந்தெடுத்து இந்திய அணியில் களமிறங்கிய இருந்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றியை ருசித்து இருக்கும் அவர் கூறினார் ஆனால் பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் சரியான வீரரை தேர்ந்தெடுத்து விளையாண்டதால் அவர் வெற்றி பெற்றார் என இன்சமாம் உல் ஹக் கூறினார்.