தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒருவராக இருப்பவர் சுந்தர் சி. இவர் சமீபகாலமாக பேய் திரைப்படங்கள் எடுத்து சூப்பர்ஹிட் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் வசூல் வேட்டையும் கண்டு வருகிறார். அரண்மனை என்னும் படத்தை எடுத்திருந்தார்.
அந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் அதை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வருகிறார் தற்போது மூன்றாம் பாகத்தை எடுத்துள்ளார் இந்த திரைப்படம் அக்டோபர் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்பாக படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. படம் குறித்தும் நடிகர், நடிகைகள் குறித்தும் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு ஒவ்வொன்றாக நடிகர்களும், இயக்குனரும் தனது பதில்களை சொல்லி வந்தனர். அரண்மனை3 திரில்லர் மற்றும் காமெடியை இருப்பதால் இந்த படம் மக்கள் மத்தியில் தற்போது நல்லதொரு எதிர்பார்ப்பை வைத்துள்ளது. இந்த படத்தில் சுந்தர் சி இயக்கிய அவரும் நடித்து உள்ளார்ர். மேலும் ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக ராசிகண்ணா, ஆண்ட்ரியா, சக்ஷி அகர்வால் போன்றோரும் நடிக்கின்றனர்.
காமெடியனாக யோகிபாபு, மறைந்த நடிகர் விவேக், மனோபாலா போன்றோரும் பின்னி பெடல் எடுத்து உள்ளனர் இந்த திரைப்படத்தை அவ்னி மேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்கும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அரண்மனை 3 படத்தை உதயநிதி ஸ்டாலின் பார்த்துவிட்டு மிக அருமையாக வந்திருப்பதாக அவர் சொல்லியுள்ளார்.
மேலும் அரண்மனை முதல் பாகம் படம் வெளிவருவதற்கு முன்பாக அவர் அந்த படத்தை பார்த்துவிட்டு அரண்மனை முதல் பாகம் சூப்பர் ஹிட் அடிக்கும் சொன்னார் அது போலவே நடந்தது தற்போதும் அரண்மனை 3 பார்த்து அவர் சொல்லி உள்ளதால் படம் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.