“பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்த மணிரத்தினம்.! புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்திய படக்குழு.

ponniyin-selvan
ponniyin-selvan

காலத்திற்கு ஏற்றவாறு தனது கதைகளை  மாற்றி அமைத்து மக்களுக்கு விருந்து கொடுத்து வருபவர் இயக்குனர் மணிரத்தினம் ஆரம்பத்தில் வரலாற்று கதைகளை தழுவி படங்களை எடுத்து வந்த மணிரத்னம் ஒரு கட்டத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் இறங்கினார்.

அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்க ஆரம்பித்தன. அதன் விளைவாகவே தற்போதும் இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது தற்போது பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி புதிய படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் 15-க்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  முழுக்க முழுக்க அரண்மனை மற்றும் கோயில்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் என்பதால் இந்தியாவை சுற்றி உள்ள அனைத்து இடங்களிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தை பாகுபலி படத்தின் ரேஞ்சே ஏற்றவாறு இருக்குமென ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படத்தில் நடிக்கும் பிரபலங்கள் காரணமாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஜெயராம், சரத்குமார், பிரபு, விக்ரம், பிரபு, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பட்டாளங்கள் இருப்பது தான். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார். இவர் நிச்சயம் இந்த படத்திற்கான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நாளிலிருந்தே இந்தியாவை சுற்றியுள்ள ஹைதராபாத், பாண்டிச்சேரி போன்ற பல இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை மத்திய பிரதேசத்தில் தொடங்கி ஒருவழியாக முடித்துள்ளனர். முடிவடைந்ததை அடுத்து படக்குழு தற்போது புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது வருகின்ற 2022 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவித்தது.

ponniyin-selvan
ponniyin-selvan