11 நாள் முடிவில் உலகம் முழுவதும் “விக்ரம் திரைப்படம்” – கல்லா கட்டிய தொகை எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த ரிப்போர்ட்.

vikram
vikram

உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் எவ்வளவோ வெற்றி படங்களை கொடுத்து இருந்தாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற அதிக வசூலை அள்ளி குவித்த திரைப்படங்கள் கொஞ்சம் தான். இருப்பினும் நடிகர் கமலஹாசன் தொடர்ந்து சினிமா உலகில் பயணித்துக் கொண்டுதான் இருந்தார்.

ஒரு வழியாக நான்கு வருடங்கள் கழித்து லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை அவருக்கு ரொம்ப பிடித்து போக விக்ரம் திரைபடத்தில் நடித்தார் மேலும் அந்த திரைப்படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் கமலகாசனே தயாரித்தார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா என பலரும் மிரட்டி இருந்தனர். படம் ஒருவழியாக ஜூன் மூன்றாம் தேதி வெளியாகி ரசிகர்கள் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தொடர்ந்து படம் அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அதன் காரணமாக விக்ரம் திரைப்படம் நல்லதொரு வசூலை அள்ளி உள்ளது. குறிப்பாக தமிழகத்தை தாண்டி தெலுங்கு கேரளா போன்ற இடங்களில் விக்ரம் திரைப்படத்தின் வசூல் குறைந்து இல்லாமல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படம் வெளியாகி.

11 நாள் முடிவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி பார்க்கையில் விக்ரம் படம் 11 நாளில் 310 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகின்ற நாளிலும் நல்ல வசூலை அள்ளி  விக்ரம் படம் வசூலில் ஒரு புதிய உச்சத்தை தொடும் என கூறப்படுகிறது.