1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய இந்திய திரைப்படங்கள் – மாஸ் காட்டிய யாஷ்

KGF 2
KGF 2

சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களுக்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர் இதனால் அவருடைய படங்கள் சுமாராக இருந்தாலே அசால்டாக 300 கோடி 400 கோடி வசூல் செய்துவிடும் படம் சிறப்பாக இருந்தால் 1000 கோடி கன்ஃபார்ம் அப்படி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய திரைப்படங்கள் பற்றி விலாவாரியாக பார்ப்போம்..

1. பாலிவுட்டில் டாப் ஹீரோவாக பார்க்கப்படுபவர் அமீர்கான் இவர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு நித்திஷ் திவாரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் “தங்கல்”. அமீர்கான் தான் மிகப் பெரிய ஒரு விளையாட்டு வீரராக வரவேண்டும் என எண்ணி இருப்பார் ஆனால் அவருடைய கனவு தோத்துவிடும் அதன் பிறகு அவருடைய பிள்ளைகளை திறமையாக பயிற்சி கொடுத்து அவர்களை வெற்றி பெற வைப்பார்.

படத்தில் ஒவ்வொரு சீனும் சிறப்பாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தை பார்த்தனர் இதனால் இந்த படம் வெளியாகி அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் 1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது. படத்தில் சானியா மல்கோத்ரா, ரைசா வாசிம், பாத்திமா சனா, சாஷி தன்வார் மற்றும் பலர் அமீர்கான் உடன் இணைந்து நடித்திருப்பார்.

2. சின்ன சின்ன பட்ஜெட்டில் பல வெற்றி படங்களை கொடுத்து வந்த ராஜமௌலி. “பாகுபலி 2” படத்தை மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்தார் படம் வெளிவந்து 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது அதனைத் தொடர்ந்து பாகுபலி 2 2017 ஆம் ஆண்டு உருவானது. படம் சிறப்பாக இருந்ததால் அதிக நாட்கள் ஓடியே 1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், ராணா டகுபதியும் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

3. பாகுபலி 2 படத்தை தொடர்ந்து ராஜமௌலி உருவாகிய திரைப்படம் “RRR”. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்திருந்தனர் வெள்ளையாளர்களிடம் இருந்து  ஆயுதங்களைத் திருட ராம் சரண் முயற்சிப்பார். ஜூனியர் என்டிஆர் தன் கிராமத்திலிருந்து ஒரு குழந்தையை ஆங்கிலேயர்கள் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள் அவரை மீட்க வந்திருப்பார் இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சி மற்றும் சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார் இதனால் அதிக நாட்கள் ஓடியது மட்டும் அல்லாமல் 1000 கோடிக்கு மேல அள்ளி சாதனை படைத்தது.

4. யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “KGF 2” முழுக்க முழுக்க தங்க சுரங்கத்தை நோண்டும் ஒரு படமாக இருந்தது அதே சமயம் படத்தில் ஆக்சன் போன்றவை  தெறிக்க வைக்கும் வகையில் இருந்தது இதனால் ரசிகர்களுக்கு படம் ரொம்ப பிடித்து போகவே அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் 1000 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது.

5. பாலிவுட் பாஷா என அழைக்கப்படுபவர் ஷாருக்கான் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “பதான்” திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படமாக இருந்தது. படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து தீபிகா படுகோன் மற்றும் சல்மான் கான் போன்றவர்கள் கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தினர் படம் அதிக நாட்கள் ஓடி 1000 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது.