பாகுபலியை விட பிரமாண்ட பட்ஜெட் 1000 கோடி.! பிரபாஸ் நடிக்கும் புதிய படம்.

prabhas
prabhas

தற்பொழுது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ஆரம்பத்தில் பல சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தாலும் அத்தகைய படங்கள் இவருக்கு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தது இல்லையோ ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் பாகுபலி.

இத்திரைப்படம் அவரே எதிர்பார்க்காத அளவிற்கு தெலுங்கு சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் பிரபலம் அடைந்தது இதன் மூலமாக அவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் மேலும் தனது சம்பளத்தையும் உயர்த்திக் கொண்டார் இதைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளிவந்து உலக அளவில் வசூல் சாதனை படைத்தது இதன் மூலம் அவர் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.

தற்பொழுது முன்னணி நடிகர்களின் சம்பளத்தை விட பல மடங்கு உயர்த்தியுள்ளார் இதனால் இவரது மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது இப்படங்களை தொடர்ந்து அவர் 400 கோடி பட்ஜெட் படமான சாஹோ  படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் திரைப்படம் சொல்லும் அளவிற்கு சரியான வெற்றியைப் பெறாத இவருக்கு சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து தற்பொழுது அவர் மிகப்பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட வந்த  நிலையில் அவரது 21 வது படமான  ராதே ஷ்யாம் குறித்து தகவல்கள் வெளியாகி உளளன. இப்படத்தில் அவருடன் இணைந்து தீபிகா படுகோன் அவர்கள் நடிக்க உள்ளதாக தெரியவருகிறது இந்த நிலையில் இப்படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது இதனை விட்டு நீங்காத  ரசிகர்கள் பிரபாஸின் அடுத்த படத்தை அறிவித்ததால் மேலும் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றன.

பிரபாஸின் 22வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது நேற்று இரவு பிரபாஸ் பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் என்ற இயக்குனருடன் சமூகவலைதளத்தில் பேசினார் அதன்பிறகு பிரபாஸ் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று காலை 7:11 அளவில் தனது 22 இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும் அப்படத்தின் தலைப்பும் எழுதப்பட்டிருந்தது அந்த படத்தின் பெயர் ஆதிபுருஷ் இத்திரைப்படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட உள்ளது மேலும் இந்த படத்தில் காவிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரியவருகிறது இத்திரைப்படம் பாகுபலியை விட மிக பிரம்மாண்டமாக இருக்கும் என ரசிகர்கள் ஒருபுறம் கனவுக் கோட்டை கட்டிக் கொண்டு வருகின்றனர்.