தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனம் என்று சொன்னால் அதில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஒன்று, இந்த நிறுவனத்தின் பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் அந்த திரைப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விடும். ஏனென்றால், அவர்களின் பிரமோஷன் இண்டு இடுக்கு என அனைத்து இடங்களிலும் பிரபலமடையும்.
அதே போல் ஒரு சாதாரண திரைப்படத்தை எடுத்து சன் பிக்சர் நிறுவனம் மிகப்பெரிய பிரமோஷன் செய்யும் அந்த அளவிற்கு எந்த ஒரு நிறுவனமும் புரமோஷன் செய்ததில்லை. அதேபோல் இவர்கள் சீரியல் ஒளிபரப்பப்பட்டு வரும் இடையே படத்தின் பிரமோஷன் வெளியீட்டு பார்க்காதவர்களை கூட பார்க்க வைத்துவிடுவார்கள்.
இப்படி இருக்க சன் பிக்சர் நிறுவனம் பல ஹீரோக்களை வைத்து பெரிய ப்ராஜெக்ட் ஒன்றை செய்வதற்கு முயற்சி செய்து வருகிறது, இந்த நிலையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தையும் சன் பிக்சர் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் தனுஷின் ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள், இப்படி இருக்க விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகிய முன்னணி நடிகர்களை வைத்து ஒரு மிகப்பெரிய படத்தை எடுக்க முயற்சித்து வருகிறார்களாம், இது மட்டும் நடந்துவிட்டால் சன் பிக்சர்க்கு அசுர வளர்ச்சியாக இருக்கும் என பல சினிமா வல்லுநர்கள் கூறுகிறார்கள்.