100 – நாளை தொட்ட விஜயகாந்தின் படம்.! உடனே ரஜினிகாந்த் என்ன செய்தார் தெரியுமா.?

vijayakanth

80 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பல புதிய நடிகர்கள் களம் இறங்கினர். அவர்களில் ஒருவராக ரஜினி, விஜயகாந்த், கமல் போன்ற நடிகர்கள் இருந்தனர் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரஜினி கமல் போன்றவர்கள் உடனே முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பிடித்த வந்த நிலையில் இவர்களுக்கு..

பின்னால் சைலண்டாக கிராம கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஒரு கட்டத்தில் ரஜினி கமலை ஓவர் டேக் செய்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வலம் வந்தார் விஜயகாந்த். ஒரு கட்டத்தில் விஜயகாந்த்  படங்களை பார்த்து ரஜினி, கமல் போன்ற நடிகரின் படங்கள் ரிலீஸ் தேதி பின்வாங்கியும் உள்ளது.

சினிமா உலகில் நல்ல ஹீரோவாகவும் உதவி செய்யும் மனப்பான்மையும் நேர்பட பேசுவதுமாக இருந்ததால் அப்பொழுது விஜயகாந்த் எல்லோருக்கும் பிடித்த ஒரு நடிகராக இருந்தார் மேலும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தமிழ் சினிமாவை ஒரு நல்ல பாதைக்கு கொண்டு சென்றவர் கேப்டன் விஜயகாந்த்.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வைதேகி பிறந்தாள். மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் 100 நாட்கள் இந்த படம் ஓடி அசத்தியது.

அதை கொண்டாடும் வகையில் இந்த படத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைத்தது மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜயகாந்த்க்கு பதக்கம் கொடுத்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. ரஜினி விஜயகாந்த் இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

vijayakanth and rajini
vijayakanth and rajini