rajini : 1975 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வி கோவிந்தராஜன், ஜெ துரைசாமி ஆகியோர் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் அபூர்வ ராகங்கள் இந்த திரைப்படத்தில் கமலஹாசன், ஸ்ரீவித்யா, மேஜர் சுந்தர்ராஜன், ஜெயசுதா, நாகேஷ் ரஜினிகாந்த், ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதேபோல் ரஜினிகாந்த் சினிமா பயணத்தில் இதுதான் முதல் திரைப்படம் கமலஹாசன் பிரசன்னா கதாபாத்திரத்திலும், ஸ்ரீவித்யா எம் ஆர் பைரவி கதாபாத்திரத்திலும், மேஜர் சுந்தர்ராஜன் மகேந்திரன் கதாபாத்திரத்திலும், ஜெயசுதா ரஞ்சனி கதாபாத்திரத்திலும், நாகேஷ் டாக்டர் சூரி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள். அதேபோல் ரஜினிகாந்த் அவர்கள் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் தான் பாடல் அமைத்தார் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதினார் மேலும் வாணி ஜெயராம் அவர்களால் பாடப்பட்ட ஏழு சுரங்களுக்குள் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தேசிய விருதுநையும் தட்டி சென்றது.
இந்தத் திரைப்படம் 1975 ஆம் ஆண்டு தேசிய திரைப்பட விருந்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது மேலும் இந்த திரைப்படம் வென் தாமரை விருது சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது, வெண் தாமரை விருது சிறந்த ஒளிப்பதிவு பிஎஃப் லோக்நாத் அவர்களுக்கு கிடைத்தது, அதேபோல் சிறந்த பெண்மணி பாடகருக்கான தேசிய விருதும் வாணி ஜெயராமுக்கு இந்த திரைப்படத்தில் கிடைத்தது.
அதுமட்டுமில்லாமல் சிறந்த தமிழ் நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருது கமலஹாசன் சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம் ஃபாரின் கே பாலஜந்தர் சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம் ஃபேர் விருது டி ஜெயலட்சுமி விஜயலட்சுமி ஆகியோர்களுக்கு கிடைத்தது. ரஜினி தான் நடிக்க ஆரம்பித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
இந்த திரைப்படம் ரஜினிக்கு மிக மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்பட்டது படம் வெளியாகி 100 நாட்களை கடந்து சாதனை படைத்தது. என்னதான் ரஜினி இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரமாக நடிக்கவில்லை என்றாலும் இந்த திரைப்படத்தின் மூலம் தான் ரஜினிக்கு சினிமா வாழ்க்கை துவங்கியது. அதேபோல் ரஜினி ஹீரோவாக பைரவி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் 100 நாட்கள் திரையரங்கில் ஓடி மிகப்பெரிய வெற்றியை நிலை நாட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.