தெலுங்கு சினிமாவில் ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் கலந்த 20 வதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் பிரபாஸ். ஆனால் அப்போது இல்லாத வரவேற்பு பாகுபலி படத்துக்கு அப்புறம் கிடைத்தது. இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தவர் ராஜமௌலி. தனக்கே உரிய பாணியில் எடுத்து அசத்தினார்.
இந்த திரைப்படம் வெளிவந்து ராஜமௌலியை மற்றும் பிரபாஸின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது ஏனென்றால் இந்த படம் அந்த அளவிற்கு மிகப்பெரிய அளவில் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படமாக மாறியதால் பாகுபலி அதிக நாட்கள் ஓடியது மேலும் இதன் இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டது.
அந்த படம் முதல் பாகத்தை விட அதிரிபுதிரி ஹிட் அடித்ததன் காரணமாக ஓவர் நைட்டில் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது குறிப்பாக பிரபாஸ் தற்போது நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் சுமார் 100 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் அந்த அளவிற்கு உயர்ந்து விட்டார். அதேசமயம் அவர் நடிக்கும் படங்கள் கூட 200 கோடிக்கு மேல் பட்ஜெட் படங்களாகவே இருந்து வருகின்றன.
பிரபாஸ் கடைசியாக சஹா திரைப்படத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து இப்பொழுது அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ராதே ஷ்யாம். இந்தப் படமும் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது இந்த திரைப்படத்திற்காக நடிகர் பிரபாஸ் 100 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார் இந்த படம் நேற்று கோலாகலமாக திரையரங்கில் வெளியானது.
மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வலம் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் பிரபாஸ் நான் முதன் முதலில் சினிமாவில் நடித்த படத்துக்காக வாங்கிய சம்பளம் குறித்து பேசியுள்ளார் அதன்படி பார்க்கையில் அவர் முதல் படுத்துக்கு சுமார் 4 லட்சம் தான் சம்பளம் வாங்கினாராம். ஆனால் இப்பொழுது அவரது சம்பளமும் பல மடங்கு உயர்ந்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.