கடத்த சில வருடங்களாக டாப் ஹீரோக்களின் படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்துகின்றன ஏன் அண்மையில் கூட அஜித்தின் துணிவு விஜயின் வாரிசு படங்கள் கூட 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஷாருக்கான் நடிப்பில் உருவான பதான் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது.
இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டுமே 100 கோடி வசூல் செய்திருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் முதல் நாளில் 100 கோடி வசூலித்த ஏழு திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.. 1. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மிகப் பிரமாண்டமான வசூலை அள்ளியதால் அதன் இரண்டாவது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. பாகுபலி 2 வெளிவந்து முதல் நாளில் 100 கோடி கலெக்ஷன் செய்து அசத்தியது.
2. தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிக்கும் படங்கள் மட்டும் அசால்டாக 200 கோடி ரூ.300 கோடி வசூல் செய்கின்றன ஆனால் இவர் நடித்த 2.0 திரைப்படம் மட்டும் முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 3. பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான கபாலி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ஒரு சில இடங்களில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பாக மலேசியாவில் இந்த படத்தின் வரவேற்பு அதிகரித்தது
அதனால் வசூலும் நன்றாகவே அள்ளியது முதல் நாளில் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. 4. கடந்த சமீப காலமாக அடுத்தடுத்த பாகங்கள் படமாக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் கேஜிஎப் படத்தை தொடர்ந்து கே ஜி எஃப் 2 திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் ஆயிரம் கோடிக்கு மேல் அள்ளியது முதல் நாளில் மட்டுமே இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.
5. ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் உருவான RRR திரைப்படம் முழுக்க முழுக்க பழைய காலத்தில் நடந்த ஒரு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் அள்ளியது முதல் நாளில் 100 கோடி வசூல் செய்தது. 6. பிரபாஸ் நடிப்பில் உருவான சாகோ படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது.
இருப்பினும் முதல் நாளில் இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் பாஷா என அழைக்கப்படுபவர் ஷாருக்கான் இவர் நடிப்பில் உருவான பதான் திரைப்படம் சில தினங்களுக்கு முன் தான் திரையரங்குகளில் வெளியானது படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருந்ததால் பலருக்கும் பிடித்துள்ளது அதன் காரணமாக முதல் நாளே இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது போகின்ற நிலைமை பார்த்தால் இந்த திரைப்படம் ஆயிரம் கோடி லிஸ்டில் இணையும் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.