தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் நாளில் 100 கோடி வசூல் செய்த படம்.! கிட்ட கூட நெருங்க முடியாமல் தடுமாறும் அஜித், சூர்யா

Rajini
Rajini

Rajini : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகரின் படங்கள் வெளிவந்து  மொத்தமாகவே 200 கோடி ரூ 300 கோடி வசூல் செய்கின்றன ஆனால் தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரே ஒரு திரைப்படம் மட்டும் முதல் நாளில் 100 கோடி வசூல் செய்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவான எந்திரன் திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடி 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து 2.0 படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது படத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய்குமார், மயில்சாமி போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர் படம் வெளிவந்து நல்ல கருத்துக்களை எடுத்துரைத்ததால் ரசிகர்கள் தாண்டி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடியது.  இந்த திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

முதல் நாளில் மட்டும் 2.0 திரைப்படம் 100 கோடி வசூல் செய்தது தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் நாளில் 100 கோடி வசூல் செய்த திரைப்படம் என்ற பெயரையும் இது எடுத்தது. இந்த ரெக்கார்டை ஜெயிலர் படத்தால் கூட முறையடிக்க முடியவில்லை. ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருந்தாலும் முதல் நாளில் ஜெயிலர்  திரைப்படம் 91 கோடி தான் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையை இதுவரை முறை அடிக்க முடியாமல் மற்ற டாப் நடிகர்கள் இருந்து வருகின்றனர். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள்  இந்த ரெக்கார்டை முறியடிக்க சில வருடங்கள் ஆகும் அதையும்  ரஜினி தான் முறியடிக்க வாய்ப்பு உள்ளது என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.