திரையரங்குகளில் இரண்டு மணி நேரம் முழு கதையை பார்த்துவிட்டு சுவாரசியம் இல்லாமல் திரும்பிய ரசிகர்களுக்கு வெப் சீரியஸ் பல சுவாரசியத்தை கொடுத்து வருகிறது அப்படி தமிழில் வெளியான சிறந்த 10 வெப் சீரியஸ் படங்களை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
பாவ கதைகள் :- ஆணவக் கொலையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தை சுதா கோங்காரா வெற்றிமாறன் விக்னேஷ் சிவன் கௌதம் மேனன் ஆகியோர் இயக்கத்தில் வெளியான வெப் சீரியஸ் பாவ கதைகள். இந்த வெப் சீரிஸை netflixல் பார்க்கலாம்.
ஆட்டோ சங்கர் :- பிரபல ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆட்டோ சங்கர். இந்த படம் ஒரு கிரைய்ம் த்ரில்லராக வெளியான ஒரு வெப் சீரியஸ் இந்த வெப் சீரியஸை ஜி5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ப்ரீத்:- நடிகர் மாதவன் நடிப்பில் அட்டகாசமாக வெளியான திரைப்படம் ப்ரீத். ஐ எம் டி பி யில் அதிக ரேட்டிங் பெற்று நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படமான இந்த வெப் சீரியஸ் அமேசான் பிரைமில் தமிழில் பார்க்கலாம்.
வெள்ள ராஜா :- போதைப் பொருள் மற்றும் ஹீரோயினை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தொடர் வெள்ளை ராஜா.
கள்ளச்சிரிப்பு :- பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் தயாரிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற கள்ள சிரிப்பு தொடர் ஜீ5 வில் தமிழில் பார்க்கலாம்.
இரு துருவம்:- போலீஸ் துப்பறிவாளன் போல் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ஒரு திரில்லர் கலந்த சுவாரசியமான திரைப்படமாக உருவாகியுள்ள இரு துருவம் சோனி லைவ்வில் பார்க்கலாம்.
மேலும் பிங்கர் டிப், நவம்பர் ஸ்டோரி, சூழல், விலங்கு, உள்ளிட்ட படங்களை ott தளத்தில் வெப் தொடராக பார்க்கலாம். இந்த அனைத்து படங்களையும் அனைவரும் கண்டிப்பாக பார்க்கக்கூடிய ஒன்று.