இதுவரை பலருக்கும் தெரியாத அஜித்தின் 10 விஷயங்கள்.!

Actor Ajith
Actor Ajith

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் பற்றி நமக்குத் தெரியாத 10 தகவல்கள்

1. நடிகர் அஜித்குமார் இளம் வயதிலேயே சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருந்தார் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி குடும்பத்தின் நண்பர் அப்போது எஸ்பிபி மகன் சரணுடன் ஒன்றாக பள்ளி படிப்பை பயின்ற பொழுது அஜித் சரணுடைய உடையை  அணிந்து கொண்டு தான் மாடலிங் பங்கேற்கும் அளவிற்கு இருவரும் நல்ல நட்பில் இருந்ததாக எஸ்பிபி பலமுறை மேடைகளில் கூறி இருக்கிறார்.

2. தற்பொழுது திரையில் அஜித்தை பார்த்தாலோ அவரது குரலை கேட்டாலோ பலரும் கொண்டாடுகின்றனர் ஆனால் அவரது முதல் படமான அமராவதி படத்தில்  குரல் கேட்கப்படவில்லை. அஜித்துக்கு விக்ரம் டப்பிங் செய்தார். இதே போல ஆசைப்படத்திற்கு அஜித்துக்கு பன்னீர் புஷ்பங்கள் படத்தின் நாயகன் சுரேஷ் குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3.  அஜித்தை போலவே சினிமாவில் போராடிக் கொண்டிருந்தவர் விக்ரம். இவரை வெற்றி பெறச் செய்ய அஜித் அதிகம் ஆசைப்பட்டார் ரஜினியின் தீ  திரைப்படத்தை ரீமேக் செய்து அதில் விக்ரமுடன் நடிக்க விரும்பிய அஜித் அமிதாபச்சன் தயாரித்த உல்லாசம் திரைப்படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்தவர்.

4. அஜித் குமார் சினிமாவில் நடித்து வந்தாலும் இரு சக்கர வாகனம் மற்றும் கார் பந்தயங்களில் உயிரைப் பொருள்படுத்தாமல் ஃபார்முலா ரேஸ் பந்தயங்களில் விளையாடு இருந்தார் இந்தியாவின் மிகச் சிறந்த ஓட்டுநர்களில் மூன்றாவது இடம் வரை முன்னேறி பெருமையுடையவராக அஜித் இருந்தார்.

5. அஜித் கார், பைக் போன்றவற்றையும் தாண்டி சமையல், ட்ரோன்  இயக்குதல் அதிகம் ஆர்வமுடையவர் புதிய புதிய தொழில்நுட்பங்களை கையாளுவது அஜித்திற்கு ரொம்ப பிடிக்கும் துப்பாக்கி சுடுதலில் பல பதக்கங்களை அவர் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

6.  நடிகர் அஜித்குமார் தனது ரசிகர் மன்றங்களை கலைத்து 12 ஆண்டுகளுக்கு மேலானாலும் அவர் மீதான பாசம் மட்டும் ரசிகர்களுக்கு குறையவே இல்லை அஜித்தின் படம் வெளியானால் முதல் நாளை திருவிழா போல அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

7. ஷாருக்கானுக்கு தமிழ்நாட்டில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் அஜித் ஷாருக்கானின் அசோகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

8. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதுஅதிக பற்றும் பாசமும் வைத்திருப்பவர் நடிகர் அஜித் குமார். ஒரு பேட்டியில் ரஜினி அளித்த ஹிமாலயா மேட்டர்ஸ் என்ற புத்தகம் தான் தன் வாழ்க்கையை மாற்றியது என தெரிவித்தார். ரஜினியின் பில்லா படத்தை ரீமேக் செய்து அஜித் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

9. அஜித்தின் முதுகு தண்டில் பல ஆபரேஷன்கள் செய்யப்பட்டிருந்தாலும் இன்றளவும் தன்னுடைய படங்களில் டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

10. அஜித் எங்கு சென்றாலும் கேமராவை எடுத்து செல்வது வழக்கம் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட தன்னுடைய போர்ஷன் முடிந்து விட்டால் கேமராவை எடுத்துக்கொண்டு ஃபோட்டோ ஷூட் நடத்துவது வழக்கம். அப்படி விசுவாசம் படத்தின் பொழுது கூட தன்னுடன் நடித்த அப்புகுட்டியை இவர் போட்டோ ஷூட் நடத்தியது பெரிய அளவில் வைரலானது.