10th பொதுத்தேர்வு ரத்து.! தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு.! மதிப்பெண்கள் மட்டும் இதனடிப்படையில்தான்

10-th-exam-droped
10-th-exam-droped

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என தமிழக முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்,

நாடு முழுவதும் கொரனோ வைரஸ் மிக வேகமாக பரவி வந்த நிலையில் இந்தியாவில் மிக வேகமாக பரவியது, அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் பரவி வந்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதனால் பள்ளி கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டது.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்தது, இதுகுறித்து நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியது, இந்த நிலையில் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வி அதிகாரிகள் என அனைவருடனும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வீடியோ மூலம் தேர்வு பற்றி உரையாடியுள்ளார், அந்த உரையாடலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அதுமட்டுமில்லாமல் ஒத்திவைக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

மேலும் பிளஸ் 2 மறுதேர்வு மட்டும் ஒத்திவைக்க படுவதாகவும் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார், மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாகவும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில் 80% மதிப்பெண்களும் வருகைப்பதிவு அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும் என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.