த்ரில்லரில் மிரட்டி வெற்றியடையாத 10 திரைப்படங்கள்.! அட லிஸ்டில் இந்தப்படமும் இருக்கா.?

movies
movies

தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தும் வெற்றி வரிசையில் சேராமல் இருக்கும் 10 க்ரைம் திரில்லர் திரைப்படங்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

அதே கண்கள்:- ரோஷின் வெங்கடேசன் இயக்கத்தில் கலைராஜன், ஜனனி ஐயர் நடிப்பில் சுவாரஸ்ய திரைக்கதையில் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் அதே கண்கள். இந்த படம் கன்னட மொழியில் ரீமேக் செய்து உள்ளனர். மேலும் இப்படம் தமிழ் திரை உலகில் பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் தோல்வியை சந்தித்தது.

ஆறாத சினம் :- அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ஆறாது சினம் திரைப்படம் க்ரைம் திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த படம் ரசிகர்களை கடைசி வரைக்கும் ஒரு பதட்டத்திலேயே கொண்டு சேர்த்தது. மேலும் இந்த திரைப்படம்  நடிகர் அருள்நிதி அவர்களை தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக நிலை நிறுத்தியது.

மாயவன்:- நடிகர் சுந்தீப் கிஷன் நடிப்பில் த்ரில்லர் மற்றும் அறிவியல் கலந்து உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த படம் சுவாரஸ்ய காட்சிகள் மற்றும் திருப்பங்கள் அனைத்தும் இந்த படத்திற்கு மேலும் வலு சேர்த்தது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.

கிருமி:- கதிர் மற்றும் ரேஷ்மி மேனன் நடிப்பில் வெளியான கிருமி திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி அடைந்தாலும் வசூல் ரீதியாக படும் தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் திரைக்கதை அனைத்தும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

மெட்ரோ:- பாபி சிம்ஹா மற்றும் மாயா நடிப்பில் வெளியான ஒரு திரில்லர் திரைப்படம் மெட்ரோ. இந்தத் திரைப்படம் ஜெயின் ராபரி மற்றும் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை பற்றி உருவாக்கியுள்ள திரைப்படம் ஆகும். இந்த படத்தில் வரும் திரில்லர் காட்சிகள் மற்றும் வசனங்கள் மேலும் இந்த படத்திற்கு வலு சேர்த்தது.

இரவுக்கு ஆயிரம் கண்கள்:- அருள்நிதி நடிப்பில் வெளியான ஒரு திரில்லர் திரைப்படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை.

குரங்கு பொம்மை:- விதார்த், பாரதிராஜா நடிப்பில் வெளியான திரைப்படம் குரங்கு பொம்மை. இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்று இருந்தாலும்  வசூல் ரீதியாக படம் தோல்வியை சந்தித்தது.

மேலும் ஜீவி, கேம் ஓவர், காளிதாஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி அடைந்தாலும் வசூல் ரீதியாக தோல்வியை அடைந்ததால் இந்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் வரிசையில் இடம் பெறாமல் போனது.