தன்னுடைய அழகான குரலில் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் பாடகி ஸ்ரேயா கோஷல். இவர் பிரபலமான நமது பாடகி பார்ப்பதற்கு ஹீரோயின் போல மிகவும் அழகாக இருந்தாலும் இதுவரை திரைப்படங்களில் நடிப்பதற்கு கொஞ்சம் கூட ஆர்வம் காட்டவில்லை.
இவ்வளவு அழகாக இருக்கும் பெண்ணை எப்படி சும்மா விடுவது இதன் காரணமாக இன்று வரை பல்வேறு இயக்குனர்களும் இவரிடம் கதை சொல்வதை மட்டும் விட்டதே கிடையாது. மேலும் நமது பாடகி தமிழ்மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
மேலும் இவர் டி இமான் அனிருத் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் உடன் பணியாற்றியது மட்டுமில்லாமல் இவருக்கு தமிழ் தெரியாவிட்டாலும் அவருடைய உச்சரிப்பு பலரையும் உருக வைத்தது. அந்த வகையில் பின்னணி பாடகிகளில் அதிக அளவு சம்பளம் வாங்கும் பாடகி என்றால் அது ஷ்ரேயா கோஷல் தான்.
இவருடைய மவுசு தமிழ் சினிமாவில் அதிகரித்ததன் காரணமாக பல்வேறு இயக்குனர்களும் இவரிடம் திரைப்பட கதை கூறி வருவது மட்டுமில்லாமல் இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் அதில் கொஞ்சம் கூட ஆர்வம் காட்டாமல் ஸ்ரேயா கோஷல் தவிர்து வருகிறார்.
அந்த வகையில் இவருக்கு திருமணமாகி தற்போது 6 வருடங்கள் கடந்த நிலையில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது ஆகையால் இந்த குழந்தையை பார்த்துக் கொள்ளவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது இதன் காரணமாகத்தான் அவர் திரைப்படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து வருகிறாராம்.