திரையுலகில் உச்ச நட்சத்திர நடிகர்கள் பலரும் கோடான கோடி ரசிகர்களை வைத்திருக்கின்றனர். அந்த ஹீரோக்கள் படம் வெளிவரும் பொழுது ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே ரசிகர்கள் படம் வெளி வந்தாலும் சரி வரவில்லை என்றாலும் சரி தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து வருவார்கள்.
அதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசும் பொருள்ளாக இருக்கின்றனர். அந்த வகையில் 2023 செப்டம்பரில் பாப்புலரான 10 நடிகர்களை பற்றி தற்பொழுது ORMAX – நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது பற்றி விலாவாரியாக பார்ப்போம்..
1. நம்பர் ஒன் இடத்தில் மாஸ் காட்டி வருபவர் நடிகர் அஜித்குமார். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் சூட்டிங் தொடங்கவில்லை என்றாலும் அஜித்தை பற்றிய பேச்சுக்கள் தான் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக இருக்கின்றனர்.
2. பதான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் 900 கோடி வசூலித்து உள்ளது நிச்சயம் 1000 கோடியை தொட்டு புதிய சாதனை படைக்கும் என தெரிய வருகிறது. செப்டம்பரில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட நடிகர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
3. பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தை தொடர்ந்து சலார் மற்றும் கல்கி போன்ற படங்களில் நடித்து வருகிறார் இதனால் பிரபாஸ் பற்றிய பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.
4. புஷ்பா படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் புஷ்பா 2 இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் மேலும் புஷ்பா படத்திற்காக இவர் தேசிய விருது வாங்கியதால் இவரைப் பற்றிய பேச்சுக்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் இருந்து வருகின்றன.
5. கோடான கோடி ரசிகர்களை வைத்திருப்பவர் ஜூனியர் என்டிஆர் இவர் நடித்த RRR பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருடைய அடுத்த படத்தைப் பற்றிய பேச்சுக்கள் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது அதனாலையே பாப்புலரான நடிகர்கள் லிஸ்டில் இந்த இடத்தை பிடித்திருக்கிறார்.
6. வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார். செப்டம்பர் மதத்தில் மிக பாப்புலரான நடிகர்களில் இந்த இடத்தை விஜய் பிடித்து இருக்கிறார்.
7. பாலிவுட்டில் டாப் ஹீரோவாக வலம் வரும் சல்மான்கான் தொடர்ந்து விளம்பரம் மற்றும் படங்களில் நடித்து வருகிறார் இதனாலையே ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான நடிகராக இருக்கிறார் செப்டம்பர் மாதத்தில் அவர் இந்த இடத்தை பிடித்திருக்கிறார்.
8. ராம்சரண் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் RRR படத்தை தொடர்ந்து கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைப் பற்றி சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அடுத்தடுத்த இடத்தில் அக்ஷய்குமார் மற்றும் மகேஷ் பாபு இருக்கின்றனர்.