Jayam Ravi : தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் சீரிஸ் படம் நல்ல வரவேற்பை கண்டது அதைத் தொடர்ந்து தற்போது இறைவன், தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அதிக வசூலை அள்ளிய 10 திரைப்படங்களின் பட்டியலை பார்ப்போம்.
1.தனி ஒருவன் : மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். மேலும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் போன்றோரும் நடித்திருந்தனர். வெளியாகி உலகம் முழுவதும் 63 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறதாம்.
2 M.குமரன் S/O மகாலட்சுமி : ஜெயம் ரவி, அசின், பிரகாஷ் ராஜ், நதியா, விவேக் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படம் ஜெயம் ரவிக்கு ஒரு மாபெரும் வெற்றி படமாகும். இந்த படம் உலக அளவில் 16 கோடி வசூல் செய்திருக்கிறது.
3. அடங்க மறு : கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி போலீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்திருந்தார். படம் உலக அளவில் 64 கோடி வசூல் செய்திருக்கிறது.
4. உனக்கும் எனக்கும் : ஜெயம் ரவியின் ஆஸ்தான இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, திரிஷா, பிரபு, பாக்கியராஜ் , சந்தானம், மணிவண்ணன் போன்ற பலர் நடித்த இந்த திரைப்படமும் ஜெயம் ரவிக்கு ஒரு முக்கிய படமாகும் இந்த படம் அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமில்லாமல் உலக அளவில் 27 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது.
5. சந்தோஷ் சுப்பிரமணியம் : ஜெயம் ரவி, ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த திரைப்படம். குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்தால் அனைவரது மத்தியிலும் கைதட்டல் வாங்கி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து உலக அளவில் 33.40 கோடி வசூல் செய்திருக்கிறது.
6. பேரான்மை : ஜெயம் ரவி கேரியரில் மறக்க முடியாத படமான பேரான்மை. இளம் பெண்களை காட்டுக்கு அழைத்து சென்று வில்லன்களுடன் சண்டை போடுவார் படமும் நல்ல ஹிட் அடித்து உலகம் முழுவதும் 25 கோடி வசூல் செய்தது.
6. ஜெயம் : இந்த படம் இவருக்கு முதல் படமாகும்.. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரையும் திரும்பி பார்க்க வைத்தார் படம் வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததோடு உலகம் முழுவதும் 18 கோடி வசூல் செய்திருந்தது.
8. கோமாளி : இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். காமெடியன்னாக யோகி பாபு பின்னி இருப்பார். மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்திருந்தனர் இந்த படம் வெளியாகி உலகம் முழுவதும் 65 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.
9. பூலோகம் : கல்யாண கிருஷ்ண இயக்கத்தில் ஜெயம் ரவி திரிஷா நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம்.முழுக்க முழுக்க குத்து சண்டையை மையமாக உருவானது. படம் சிறப்பாக இருந்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. உலகம் முழுவதும் 21 கோடி வசூல் செய்திருந்தது.
10. நிமிர்ந்து நில் : சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்த இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். இந்த காலத்துக்கு தேவையான படமாக இருந்தால் ரசிகர்கள் தையில் தூக்கி வைத்து கொண்டாடினர். இந்த படம் வெளியாகி 22.50 கோடி வசூல் செய்திருந்தது.