தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலிருந்து தற்போது தற்போது வரையிலும் ஏதேனும் ஒரு திரில்லர் திரைப்படம் வெளியாகிக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அப்படி உருவாகும் திரில்லர் திரைப்படங்கள் இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு காமெடி கலந்த ஒரு திரில்லர் திரைப்படமாக பல இயக்குனர்கள் எடுத்து வருகிறார்கள்.
ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் ரசிகர்களை பயத்துடன் வைத்திருக்கும் அப்படி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற 10 சிறந்த திரில்லர் படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். இதோ அந்த படங்களின் பட்டியல்.
தி டவுன் :- இயக்குனர் பெண் அப்லெக் இயக்கத்தில் கடந்த 2019 வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படம் தி டவுன். இந்த திரைப்படம் ஒரு வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தாலும் இந்த திரைப்படத்தை கடைசி வரைக்கும் விறுவிறுப்பாகவே சென்று இருக்கிறது. இந்த திரில்லர் படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
தி பார்ன் அல்டிமேட்டம் :- 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பயிற்சி பெற்ற ஒரு கொலைகாரன் ஜேசன் பாரனுக்கும் சிஐஏ அதிகாரிகள் மற்றும் அவரது ஏஜெண்டுகளுக்கு இடையே நடக்கும் யுத்த களத்தை கதைகளமாக கொடுத்துள்ளது இந்த திரைப்படம்.
தி கம்மூட்டர் :- 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ஒரு ரயில் பயணத்தின் போது மர்மமான ஒரு பெண்ணை சந்திக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கொலை வழக்கில் சிக்கிக் கொள்கிறார்கள் அதன் பிறகு அந்த மர்மமான பெண்ணிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் அந்த கொலை வழக்கில் இருந்து எப்படி மிளுகிரார்கள் என்பதை திரில்லர் பாணியில் கொடுத்துள்ளனர்.
நான் ஸ்டாப் :- 2014 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் ஒரு விமானப்படை தளபதியிடம் 150 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் அப்படி கொடுக்கவில்லை என்றால் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருவர் கொல்லப்படுவார் என்று அந்த விமானப்படை தளபதிக்கு ஒரு மெசேஜ் வருகிறது. இந்த சிக்கலில் இருந்து அந்த விமானப்படை தளபதி எப்படி அவர்களை காப்பாற்றுகிறார் அந்தக் கொலைகாரர்களை எப்படி அவர் கண்டுபிடிக்கிறார் என்பது மீதி கதை.
பாடி ஆப் லைஸ் :- 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் ஒரு சிஐஏ ஏஜென்ட் பயங்கரவாதி ஒருவரை பின் தொடர்கிறார். அப்போது அவர் எதிர்பாராத வீரமாக ஒரு பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து எப்படி அவர் மீண்டு வருகிறார் என்பதே இந்த படத்தின் கதை.
சோடியாக் :- கடந்த 2007 ஆம் ஆண்டு டேவிட் பிஞ்சர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் என்ற ஒரு நபர் மருமமான சோடியாகிரில்லரை பிடிக்க முயலும் கதை தான் இது.
செவன் :- 1995 ஆம் ஆண்டு வெளியான இரண்டு டிடெக்டிவ் ஏஜெண்ட்ஸ் இணைந்து ஒரு சீரியல் கில்லரை பிடிக்கும் கதைதான் செவன்.
மேலும் 2020 இல் வெளியான ராத் அகேலி ஹை, மற்றும் 2014 ஆம் ஆண்டு வெளியான தி இன்டர்வியூ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்.