Jawan : சினிமா உலகில் இருக்கும் டாப் நடிகர்களுக்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த ரசிகர்கள் தங்களது ஹீரோவின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க ப்ரீ புக்கிங்கில் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை பதிவு செய்வது வழக்கம்.. அந்த வகையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஜவான் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
காரணம் இந்த படத்தில் இருந்து இதுவரை வெளிவந்த அப்டேட்டுகளான பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல், டிரைலர் போன்ற ஒவ்வொன்றும் தெறி மாஸாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி என பெரிய திரை படங்களில் நடித்திருப்பது.
இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது இந்த படம் தான் ஷாருக்கான் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது படம் இன்னும் இரண்டு தினங்களில் ஈடுபதால் தற்பொழுது டிக்கெட் புக்கிங் ஜோராக போய்க் கொண்டிருக்கிறது.
முதல் நாள் முடிவில் மட்டும் 2,72,732 டிக்கெட் பெற்றுள்ளது ஜவான் படம் வெளிவர இன்னும் இரண்டு தினங்களில் இருப்பதால் இந்த டிக்கெட் புக்கிங் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. டிக்கெட் புக்கிங் மட்டும்10 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அளவில் முதல் நாளில் அதிக டிக்கெட் புக்கிங் செய்யப்பட்ட 10 படங்கள் குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
1. டிக்கெட் புக்கிங்கில் முதல் நாளில் மட்டும் பிரபாஸின் பாகுபலி 2 திரைப்படம் – 6,50,000 டிக்கெட் விலை விற்றது. 2. ஷாருக்கானின் பதான் திரைப்படம் – 5,56000 டிக்கெடுகளை விற்றது. 3. கன்னட நடிகர் யாசின் கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படம் – 515000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டது.
4. வார் – 410000 ஃப்ரீ புக்கிங் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. 5. Thugs of hindostan – 3,46,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. 6. Premratandhanpayo – 340000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. 7. பாரத் – 316000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
8. சுல்தான் – 310000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. 9. Dangal – 305000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. 10. Brahmastra – 302000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இந்த லிஸ்டில் ஜவான் திரைப்படம் டே ஒன் கரண்ட் டிக்கெட் விற்பனை மட்டும் 272732 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
Top 10 Day 1 Advance at National Multiplexes#Baahubali2 – 6,50,000#Pathaan – 5,56,000#KGFChapter2 – 5,15,000#War – 4,10,000#ThugsOfHindostan – 3,46,000#PremRatanDhanPayo – 3,40,000#Bharat – 3,16,000#Sultan – 3,10,000#Dangal – 3,05,000#Brahmastra – 3,02,000#Jawan Day… pic.twitter.com/HUsPxg0cgX
— Manobala Vijayabalan (@ManobalaV) September 4, 2023