தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் பெரும் அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் வாரிசு நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி வாழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா.
இவர் நடிகர் சிவகுமாரின் மகனாக சினிமாவிற்கு அறிமுகமானாலும் சொல்லும் அளவிற்கு சூர்யாவிற்கு பிரபலத்தை தரவில்லை.இதனை அறிந்த சூர்யா தன்னை சுதாரித்துக் கொண்டு தனது நடிப்புத் திறமையினால் வளர்ந்து தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பொதுவாக சூர்யா ஒரே மாதிரி ஸ்டைலில் நடிக்காமல் வித்தியாசமான கதை உள்ள திரைப்படங்களைய தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இவர் நடிகராக மட்டுமல்லாமல் தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீப காலங்களாக சூர்யா நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையாமல் இருந்து வந்தது. எனவே ஒரு சில ரசிகர்கள் கூட உங்களுக்கு இன்னும் சரியாக நடிக்க தெரியவில்லை என்று சூர்யாவிடம் நேரடியாக கூறினார்கள் அதற்கு சூர்யா இனிமேல் நடிக்க கற்றுக் கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த வருடம் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.இத்திரைப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா முரளி நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சூர்யா நடித்திருந்த திரைப்படங்களில் எந்தந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்ற 10 திரைப்படங்களில் லிஸ்டை தற்போது பார்ப்போம்.
1.வாரணம் ஆயிரம்
2. நந்தா
3. கஜினி
4.காக்க காக்க
5.அயன்
6.மௌனம் பேசியதே
7.சிங்கம்
8.தானா சேர்ந்த கூட்டம்
9.பிதாமகன்
10.24