தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர் மத்தியில் மொக்கை வாங்கிய 10 திரைப்படங்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
கோப்ரா :- நடிகர் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான திரைப்படம் கோபுரா இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது.
கேப்டன்:- ஆர்யா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் உருவான ஒரு திரில்லர் திரைப்படம் கேப்டன். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது ஆனால் இந்த படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது.
என்ன சொல்லப் போகிறாய் :- குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் அஸ்வின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் இந்த படம் வெளியாகி தோல்வி அடைந்தது.
பிரின்ஸ்:- நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஒரு காமெடி திரைப்படம் பிரின்ஸ் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தாலும் படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இந்தப் படத்தின் மூலம் ஒரு பெரிய அடி விழுந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
வீரமே வாகை சூடும்:- விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது.
காபி வித் காதல்:- இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் ஒரு காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது ஆனால் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறாததால் தோல்வியடைந்தது.
ஐங்கரன்:- நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் ஒரு சயின்டிஸ்ட் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது அனால் இந்த படமும் தோல்வியை சந்தித்து இருக்கிறது.
மாறன்:- கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தனுஷ் அவர்களுக்கு ஒரு தோல்வி திரைப்படமாக அமைந்துள்ளது.
கொம்பு வச்ச சிங்கம்டா :- எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் ஜனவரி 13-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் மடோனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியை சந்தித்தது இருக்கிறது.
இடியட்:- இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் ஒரு காமெடி திரில்லர் திரைப்படம் இடியட். இந்தத் திரைப்படத்தில் சிவா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் பெரும்பாலும் ரீச் ஆகாததால் ஒரு தோல்வி படமாக அமைந்துள்ளது.
நானே வருவேன்;- செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த நானே வருவேன் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னாள் பலரது எதிர்பார்ப்பில் இருந்தது அனால் படம் வெளியாகி கலவையான விமர்ச்சனத்தை பெற்று தோல்வியடைந்தது.