10 movies composed by Anirudh : இந்திய சினிமாவில் மிகவும் பிசியான மியூசிக் டைரக்டர் என்றால் அது அனிருத் தான் இவர் கைவசம் தற்பொழுது பல திரைப்படங்கள் இருக்கின்றன அது மட்டும் இல்லாமல் அனிருத் இசையில் வெளியாகிய பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். கடைசியாக அனிருத் ஜெயிலர் மற்றும் லியோ திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் அடுத்தடுத்து அனிருத் இசையமைக்க போகும் 10 மெகா பட்ஜெட் திரைப்படங்களை இங்கே காணலாம்.
தலைவர் 170 ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார். இந்த புகைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில், ராணா ஆகியவர்கள் நடிக்க இருக்கிறார். படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 171 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார். அடுத்ததாக விடாமுயற்சி மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்தியன் 2 ஷங்கர் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார் இந்த திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்கா, குரு சோமசுந்திரம் ஆகியோர்கள் நடிக்கிறார்கள்.
“தேவரா” ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் தெலுங்கு பான் இந்தியா ஆக்சன் மூவியாக உருவாகி வருகிறது இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் முருகதாஸ் இணையும் புதிய திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது, அதனைத் தொடர்ந்து சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் திரைப்படத்திற்கும், #VD12 விஜய் தேவார கொண்டாராஷ்மிகா நடிக்கும் திரைப்படத்திற்கும், விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன் இணையும் திரைப்படத்திற்கும், அதர்வா நடிக்கும் புதிய திரைப்படம் அல்லு அர்ஜுனின் புதிய திரைப்படம் என அனிருத் தொடர்ந்து பத்து திரைப்படங்களுக்கு இசையமைக்க இருக்கிறார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.