திரை உலகில் இருக்கும் நடிகைகள் தொடர்ந்து கிளாமரையும், நடிப்பையும் வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைகின்றனர். இந்த வகையில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 இந்திய சினிமா நடிகைகள் யார் யார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
1. நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த வருடத்தில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் மேலும் ரசிகர்களை கவர்ந்திழுக்க அவர் அதிக கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் இப்படி பிரபலமான இவர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் லிஸ்டில் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
2. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் கடைசியாக நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சற்று கிளாமராக நடித்திருந்தார் மேலும் தொடர்ந்து இவர் வெளியிடும் புகைப்படங்களும் வேற லெவலில் இருந்து வந்துள்ளன. இவர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
3. நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க ரெடியாகி உள்ளார் இவர் திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து கியூட்டான மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் இவர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார்.
4. மாடல் அழகியும், நடிகையுமான பிரியங்கா சோப்ரா. பிரபல பாடகரை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தனது அழகை அவர் வெளிக்காட்டிக்கொண்டு தான் இருக்கிறார் இதனால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான நடிகையாக இருக்கிறார் இவர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
5. ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட் இவர் கடைசியாக தென்னிந்திய சினிமாவில் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்திருந்தார். இவர் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் சூப்பராக நடிக்க கூடியவர் அதேசமயம் கிளாமரிலும் புகுந்து விளையாடியவர். இவர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
6. இடுப்பழகி என்றால் அது கத்ரீனா கைஃப் தான். இதுவரையிலும் இடுப்பை செம்மையாக மைண்டைன் பண்ணி வருகிறார் இவரது அழகை பார்க்கவே பலரும் படங்களை பார்க்கின்றனர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் முதலிடத்தை அவர் தான் பிடித்துள்ளார்.
7 வது இடத்தில் ஐஸ்வர்யா ராய், 8 வது இடத்தில் தீபிகா படுகோன், 9 வது இடத்தில் நயன்தாரா, 10 வது இடத்தில் தமன்னா..