ரஜினிகாந்துடன் ஜோடி சேராத 10 முன்னணி நடிகைகள்.! அதை நினைத்து இன்றுவரை வருத்தப்படும் சினேகா

Sneha
Sneha

Rajini : தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்து  ஓடுவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலை அள்ளி வருகிறது.

தற்போதும் ரஜினியுடன் ஜோடி அல்லது ஒரு சின்ன ரோலிலாவது நடித்து விடமாட்டோமா என முன்னணி நடிகைகள் முதற்கொண்டு இளம் நடிகைகள் வரை பலரும் போட்டி போட்டு வருகின்றனர் ஆனால் அந்த வாய்ப்பு என்னவோ சிலருக்கு தான் கிடைக்கின்றன. இப்படி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தும் ரஜினியுடன் மட்டும் நடிக்க முடியாமல் போன பத்து நடிகைகள் யார் யார் என்பதை பார்ப்போம்..

1. சுகன்யா : 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சுகன்யா கமல், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்தி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் ஆனால் ரஜினியுடன் மட்டும் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டவர் ஆவார்.

2. கிரண் ராதோட் : தமிழில் ஜெமினி படத்தின் மூலம் பிரபலமான கிரண் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பழமொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். ஆனால் ரஜினியுடன் மட்டும் நடிக்க முடியாமல் போனது.

3. அசின் : தமிழில் எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் ஹீரோயின்னாக அறிமுகமான அசின் விக்ரம், கமல், அஜித், சூர்யா போன்ற பல டாப் நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் ஆனால் இவரால் ரஜினியுடன் மட்டும் நடிக்க முடியாமல் போனது.

4. தேவயாணி : 90களில் ரசிகர்களின் மனதை கவர்ந்து ஃபேவரட் நடிகையாக வலம் வந்த இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் ரஜினியுடன் மட்டும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5. சினேகா : புன்னகை அரசி சினேகா 90களில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர். இவர் கமல், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஹிட் படத்தை கொடுத்தவர் ஆனால் ரஜினியுடன் மட்டும் இவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6. ரஞ்சிதா : தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்த ரஞ்சிதா ரஜினியுடன் மட்டும் இதுவரை நடிக்க முடியாமல் போனது.

7. லைலா : பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் ரஜினியுடன் மட்டும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

8. காஜல் அகர்வால் : தமிழில் அர்ஜுன், அஜித், விஜய், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்த காஜல் அகர்வால் ரஜினியுடன் மட்டும் இதுவரை ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

9. ஸ்ருதிஹாசன் : வாரிசு நடிகையான இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு விஷாலுடன் பூஜை, அஜித்துடன் வேதாளம், விஜய் உடன் புலி போன்ற படங்களில் நடித்த இவர் இதுவரை ரஜினியுடன் மட்டும் நடிக்கவில்லை.

10. கௌசல்யா : 90களில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த இவர் ரஜினியுடன் மட்டும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.