2023 தமிழ்நாட்டில் அதிக வசூல் வேட்டையாடிய 10 படங்கள்.! விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளிய ஹீரோ

Ajith
Ajith

2023 ஆம் ஆண்டு சினிமா உலகத்திற்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது ஆம் டாப் நடிகர்கள் தொடங்கி இளம் நடிகர்கள் படங்கள் வரை வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளன இந்த நிலையில் 2023 – ல் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த 10 படங்கள் குறித்து பார்ப்போம்..

ஜெயிலர் : ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவானது படம் வழக்கமான அப்பா மகன் சப்ஜெக்ட்டாக இருந்தாலும் படத்தில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு விநாயகத்தின் ரவுடிசம் போன்றவை ரசிகர்களை வியக்க வைத்தன இதனால் குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வெற்றி நடை கண்டு வருகிறது தமிழ்நாட்டில் மட்டும் ஜெயிலர் படம் சுமார் 190 கோடி வசூலித்துள்ளது.

வாரிசு : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடும் தளபதி விஜய் கடைசியாக நடித்த வாரிசு திரைப்படம் குடும்ப சப்ஜெக்ட் படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கற்றது உலகம் முழுவதும் வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் எழுதியது தமிழகத்தில் மட்டும் 146.10 கோடி வசூல் செய்தது.

பொன்னியின் செல்வன் 2 : மணிரத்தினம் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக எடுத்தார் இரண்டாவது பாகம் அண்மையில் வெளிவந்து பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது உலகம் முழுவதும் இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது தமிழகத்தில் மட்டும் 140.70 கோடி  வசூல் செய்தது.

துணிவு : ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக வெளிகாட்டியது இதனால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் போட்டி போட்டுக் கொண்டு  படத்தை பார்த்தனர் துணிவு படம் உலகம் முழுவதும் 230 கோடிக்கு மேல் வசூல் செய்தது தமிழகத்தில் மட்டும் 116.40 கோடி வசூல் செய்து அசத்தியது.

மாமன்னன் : மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியின் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் சமூகத்திற்கு தேவையான படமாக இருந்ததால் பலரும் இந்த படத்தை போட்டி போட்டுக் கொண்டு  பார்த்தனர் அதனால் படத்தின் வசூலும் அதிகரித்தது தமிழகத்தில் மட்டுமே சுமார் 51.15 கோடி வசூலித்தது.

மாவீரன் : மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான கதையைக் கொண்டது படத்தில் காமெடி, ஆக்சன், எமோஷனல் என அனைத்தும் இருந்ததால் அதிக நாட்கள் ஓடி 80கோடிக்கு மேல் வசூல் செய்தது தமிழகத்தில் மட்டும் 50.25 கோடி வசூலித்துள்ளது.

ஜவான் :  அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான இந்த திரையை படம்   ஆக்சன் சென்டிமென்ட் எமோஷனல் அனைத்தும் இருந்ததால் தொடர்ந்து வெற்றி நடை கண்டு வருகிறது இதுவரை மட்டுமே 700 கோடிக்கு மேல் செய்து வருகிறது தமிழகத்தில் மட்டும் 42 கோடி வசூலித்து இருக்கிறது.

விடுதலை பார்ட் 1 : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் நடக்கும் பிரச்சனையை பெரிதாக காட்டியது படம் நன்றாக இருந்ததால் அதிக நாட்கள் ஓடியதோடு வசூலிலும் ருத்ரதாண்டவம் ஆடியது தமிழகத்தில் மட்டும் 40.20 கோடி வசூல் செய்தது.

வாத்தி : தனுஷ் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்ட படமாக இருந்ததால் அனைத்து தரப்பட்ட மக்கள் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது தமிழகத்தில் மட்டும் 35. 20 கோடி வசூல் செய்துள்ளது.

மார்க் ஆண்டனி  :  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா விஷால் நடிப்பில் உருவான இந்த திரைப்படம்  டைம் டிராவல் சம்பந்தப்பட்ட ஒரு படம் தான் ஆனால் காமெடி, ஆக்சனுக்கு பஞ்சமே இல்லை  நல்ல வரவேற்பை பெற்று ஓடுகிறது தமிழகத்தில் நான்கு நாட்கள் முடிவில் மட்டுமே 33 கோடி வசூல் செய்துள்ளது.

https://x.com/BoxOfficeSouth2/status/1704205847747055795?s=20