தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்கள் சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்று வருகிறார்கள் அந்த வகையில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு சில நடிகர்கள் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள் அந்த வகையில் சுமார் பத்து ஹீரோக்கள் மட்டுமே இந்த கதாபாத்திரத்தில் மூழ்கி முத்து எடுத்தவர்கள் என்றே சொல்லலாம். அவர்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.
ரஜினிகாந்த் இவர் ஆக்ரோஷமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் இவர் ஒரு ஸ்டைலிஷ் போலீசாக வலம் வந்தவர் என்று சொல்லலாம். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான மூன்று முகம், கொடி பறக்குது போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் அலெக்ஸ் பாண்டியன் என்றால் ரஜினி தான் என்ற அளவிற்கு தன்னுடைய நடிப்புத் திறனை தமிழ் சினிமாவில் ஆழமாக பதித்து விட்டார். அந்த வகையில் போலீஸ் கதாபாத்திரத்தில் வரிசையில் ரஜினிகாந்த் ஆறாவது இடத்தில் உள்ளார்.
கமலஹாசன் இவர் நடிப்பில் வெளியான மூன்று முக்கிய திரைப்படங்கள் இவர் பிரபலமாவதற்கு முக்கியத்துவம் கொடுத்தது அந்த வகையில் குருதிப்புனல் காக்கி சட்டை வேட்டையாடு விளையாடு போன்ற திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருப்பார் டாப் டென் வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
நடிகர் விக்ரம் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் அதற்கு தகுந்தார் போல் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படங்களை செதுக்கியது மட்டும் இல்லாமல் சாமி திரைப்படத்தில் இவர் நிஜ போலீஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதை மண்டமாக சுட்டி காட்டி இருப்பார் அந்த வகையில் டாப் 10 வரிசையில் விக்ரம் அவர்கள் நான்காவது இடத்தில் உள்ளர்.
நடிகர் சூர்யா அடிக்கடி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் அவர் நடித்த காக்க காக்க மற்றும் சிங்கம் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது அது மட்டும் இல்லாமல் சிங்கம் திரைப்படம் ஆனது இரண்டு மூன்று பாகங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் சூர்யா போலீஸ் கெட்டப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
நடிகர் அர்ஜுன் திரைப்படங்களில் பெரும்பாலும் சண்டைக் காட்சியில் அதிக அளவு நடித்து தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டியது மட்டுமில்லாமல் போலீஸ் கதாபாத்திரத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த புகழ் பெற்றுள்ளார் அந்த வகையில் இவர் நடித்த குருதிப்புனல் திரைப்படத்தில் கூட கமலஹாசன் உடன் இணைந்து நடித்த காட்சி மிக பிரமாண்டமாக அமைந்தது அதுமட்டுமில்லாமல் இவர் நடிக்கும் போலீஸ் கதாபாத்திரம் கொண்ட திரைப்படங்களில் தேசப்பற்று மிக்க வசனங்கள் இவர் பேசுவது உணர்ச்சி கரமாக இருப்பது மட்டுமில்லாமல் இவர் டாப் டென் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடிக்க வழிவகுத்துள்ளது.
விஜயகாந்த் இவர் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்து வந்த நடிகர் என்று சொல்லலாம் அந்த வகையில் ரஜினி கமல் போன்றவர்கள் இருக்கும் நேரத்தில் அதிக அளவு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஒரு நடிகர் என்று சொல்லலாம் அந்த வகையில் இவர் நடித்த கேப்டன் பிரபாகரன் சேதுபதி ஐபிஎஸ் சத்ரியன் புலன் விசாரணை வல்லரசு போன்ற ஒவ்வொரு திரைப்படங்களிலும் தன்னுடைய ஆழமான நடிப்பை வெளிகாட்டியது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவுக்கே பாடம் கற்றுக் கொடுத்தவர் என்றே சொல்லலாம் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரத்தில் முதல் இடத்தில் உள்ளார்.
இதனை தொடர்ந்து சரத்குமார் அவர்கள் ஏழாவது இடத்திலும் சத்யராஜ் அவர்கள் எட்டாவது இடத்திலும் விஜய் ஒன்பதாவது இடத்திலும் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்கள் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளார்.