தளபதி விஜய்க்கு பிடித்த 10 திரைப்படங்கள்!! எந்த படம் யார் நடிச்சதுன்னு பாருங்க.

vijay
vijay

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். இவர் சமீபகாலமாக சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த பிகில் திரைப்படம் பெண்களுக்கும் வலிமை உண்டு என்பதை உணர்த்தி காட்டிய படம் என்பதால் இது ரசிகர்களையும் தாண்டி பெண் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரையும் வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படம் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இத் திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது அவர் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இருப்பினும் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவராமல் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதே என தெரிய வருகிறது.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து அவர் அடுத்த படத்தில் தற்போது நடிக்க உள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் விஜய் பற்றிய சுவாரஸ்யமான செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அது என்னவென்றால் பல ஆண்டுகளுக்கு முன்பாக பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த பத்து படங்களை அவர் கூறியுள்ளார்.

அதில் 5 படங்கள் தான் தமிழ் படங்களாகும்: பிதாமகன், எங்க வீட்டுப் பிள்ளை,  நாயகன், அண்ணாமலை, காதலுக்கு மரியாதை, cellular, life is beautiful, salaam namasthe, road to predition,, Passion of christ போன்ற படங்களாகும்.