சின்னத்திரையில் கொடி கட்டி பறக்கும் 10 பிரபலங்கள்.. என்டர்டைன்மெண்டில் பிச்சு உதறும் புகழ் எத்தனாவது இடம் தெரியுமா?

pukazh
pukazh

small screen; வெள்ளித்திரைக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறதோ அதேபோல் சின்னத்திரைக்கும் மக்கள் மத்தியில் மவுசு இருக்கிறது. அப்படி சின்னத்திரையில் கொடிகெட்டி பறந்து வரும் 10 பிரபலங்கள் குறித்து பார்க்கலாம் அதில் ப்ங்க்ஷன், நான் ப்க்ஷன் என இரண்டாகப் பிரித்துள்ளனர்.

கார்த்திக் ராஜ்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் ஹீரோவாக நடித்த வரும் கார்த்திக் 5வது இடத்தை பிடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

கேப்ரில்லா: சன் டிவியில் துப்பாக்கி வரும் சுந்தரி சீரியலில் சுந்தரி கேரக்டரில் நடித்தவரும் நடிகை 4வது இடத்தை பிடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் டிக் டாக் மூலம் பிரபலமானார்.

மதுமிதா: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்தவரும் மதுமிதா 3வது இடத்தினை பிடித்துள்ளார். இதுதான் தமிழில் இவருடைய முதல் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.

சுசித்ரா: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா என்ற கேரக்டரில் நடித்து வரும் சுசித்ரா 2வது இடத்தை பிடித்துள்ளார்.

சைத்ரா ரெட்டி: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்தவரும் சைத்ரா ரெட்டி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இவர் இதற்கு முன்பு ஜீ தமிழ் சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார்.

நான் ப்க்ஷன்:

பாலா: காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான பாலா இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில் தற்பொழுது இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சிவாங்கி: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான இவர் இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார். தற்பொழுது இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் 4வது இடத்தை பிடித்துள்ளார்.

கோபிநாத்: நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை கூறி வரும் கோபிநாத் 3வது இடத்தினை பிடித்திருக்கிறார்.

பிரியங்கா: விஜய் டிவியின் தொகுப்பாளரான இவர் தனது கலகலப்பான பேச்சுத் திறமையினால் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இவர் 2வது இடத்தினை பிடித்திருக்கிறார்.

புகழ்: பாலா போலவே சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருபவர் தான் புகழ் இதன் மூலம் பிரபலமான இவருக்கு திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ரசிகர்களுக்கு எண்டர்டெயின்மென்ட் நடிகராக விலகி வரும் நிலையில் இவர் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.