கமல் முதல் தனுஷ் வரை தற்போது பார்ட் 2 படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
கமல்:- இந்தியன் தேவர் மகன் விக்ரம் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது இந்த மூன்று படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார் நடிகர் கமல். இதில் தேவர் மகன் 2 எடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாராம் நடிகர் கமல்ஹாசன் ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர் அறிவிப்பும் வெளியாகவில்லை.
கார்த்தி:- கார்த்தி அவர்கள் நடிப்பில் வெளியான கைதி மற்றும் பொன்னியின் செல்வன் சர்தார் ஆகிய திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்க உள்ளது இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
சூர்யா:- இயக்குனர் லோகேஷ் நாகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகர் சூர்யா. ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய நடிகர் சூர்யா விக்ரம் 2 வில் முழுமையாக இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு:- வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அடுத்ததாக பத்து தலை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எனது தொடர்ந்து வென்று தணிந்தது காடு திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்க உள்ளது இதில் முதல் பாகம் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி:- இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து உருவாகி வரும் திரைப்படம் விடுதலை இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. மேலும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது இதில் முதல் பாகம் டிசம்பரில் வெளியாக உள்ளது மேலும் இரண்டாம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ்:- இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
விக்ரம்:- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் விக்ரம். பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் பாகம் கடந்த மாதம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளது. மேலும் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவியும் நடித்துள்ளார் அதனால் இவரும் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார்.
விஷால்:- நடிகர் விஷால் அவர்கள் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது அதனை தொடர்ந்து தற்போது துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் விஷால்.