“வெந்து தணிந்தது காடு” படத்தில் நான் ஹீரோ கிடையாது.? அது கௌதம் மேனனுக்கும் தெரியும்.? சிம்பு நச் பதில்.

simbu

நடிகர் சிம்பு அண்மை காலமாக வித்தியாசமான திரைக்கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார் மேலும் அந்த படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றியும் இறக்கியும் நடித்து வருகிறார் இதனால் அந்த படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறி வருகின்றன அந்த வகையில் இப்பொழுது கௌதம் வாசுதேவ் மேனன் உடன் கைகோர்த்து சிம்பு நடித்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக உருவாகியது அதாவது ஏழையாக பிறந்த ஒரு சிறுவன் மும்பைக்கு சென்று எப்படி மிகப்பெரிய ஒரு கேங்ஸ்டர் ஆக மாறுகிறார் என்பது இந்த படத்தின் கதை இந்த படத்தை  சூப்பராக கௌதம் மேனன் எடுத்திருப்பார் ஏ ஆர் ரகுமான் சூப்பர் ஆக இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது மாநாடு பட வரிசையில் இந்த படமும் வெற்றி படமாக மாறும் என கூறப்படுகிறது சமீபத்தில் பேட்டியளித்த சிம்பு. மாநாடு படத்தின் மூலம் தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய ரிஸ்க் எடுத்ததாகவும் சவாலான ஒரு கதைக்களத்தை கொண்டிருந்த மாநாடு திரைப்படத்தின் ரசிகர்கள் எவ்வாறு வரவேற்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தன்னிடம் அதிகமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அந்த படத்தின் வெற்றி தான் அடுத்து நடிக்க போகும் படத்தில் தான் முற்றிலும் இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை தனக்கு கொடுத்ததாகவும் அவர் கூறினார் மேலும் பேசிய சிம்பு கௌதம் மேனன் என் மேல் கொண்டிருந்த நம்பிக்கையால் தான் வெந்து தணிந்தது காடு திரைப்படம் சாத்தியமானது என தெரிவித்தார் வெந்து தணிந்தது காடு படம் முற்றிலும் வித்தியாசமான ஒரு கேங்ஸ்டர் படம் தமிழ்நாட்டில் சிறு கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் மும்பைக்கு சென்று இறுதியில் ஒரு கேங்ஸ்டர் ஆக மாறுவதை சுற்றி கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும்.

தனது ரசிகர்கள் வித்தியாசமான சிம்புவை திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர் என்பதால் தான் இந்த படத்தில் நடித்திருப்பதாகவும் அவர் கூறினார் ஹீரோவை பற்றி தனது பார்வை வரையறையும் இப்படம் மாற்றிவிட்டது என்றும் ஒரு படத்திற்கு கதை தான் முக்கியம் என்றும் ஹீரோ இல்லை என்றும் கூறிய சிம்பு இந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் தன்னை எங்கும் ஹீரோவாக காட்டவில்லை என்றும் இயக்குனர் அதில் மிக கவனமாகவும் இருந்தார் என குறிப்பிட்டார்.