தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ் இவர் தற்போது திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வரேன் இரண்டு திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
அதன் பிறகு தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக வாத்தி மற்றும் கேப்டன் மிலர் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் தனுஷின் ஒரு திரைப்படத்தில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது இதற்காக அந்த நடிகை கோடம்பாக்கத்தில் செட்டில் ஆகி உள்ளாராம்.
ஆம் அதாவது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராஸ்மிகா மந்தானா தற்போது தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் தனது புகழை பரப்பி வரும் நடிகை ராஸ்மிகா மந்தன்நா தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ராஸ்மிகா மந்தன்நா நடிகர் தனுஷ் உடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதனால் நடிகை ராஸ்மிகா மந்தனா கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பங்களாவில் குடி போய் உள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் மற்றும் ரஷ்மிகா மந்தன்னா இணைந்து நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது விரைவில் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடிக்க கூடிய படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.