நடிப்பிற்கு பெயர்போன கமலஹாசன் அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சினிமா உலகில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்து அசத்துகிறார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.
படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை கமலின் கேரியரில் இப்படி ஒரு வசூல் சாதனையை பார்த்ததில்லை என சினிமா வட்டாரங்களும் ரசிகர்களும் கூறிவருகின்றனர் வெறும் நான்கு நாட்கள் ஆன நிலையிலேயே 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
கமலின் விக்ரம் படத்தில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் அசிஸ்டன்ட்களுக்கும் பைக் மற்றும் கார்களை வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார் கமல்.
விக்ரம் திரைப்படம் வெற்றிபெற மிக முக்கிய காரணங்களாக இருந்தவர்கள் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யாவும் அதில் இடம் பிடிக்கிறார் சூர்யா கடைசி பத்து நிமிடம் வந்து போனாலும் அவரது கதாபாத்திரம் மிரட்டும் வகையில் இருந்தது.
படத்திற்கு வலு சேர்க்கிறது ரசிகர்களும் அந்த காட்சியை பார்ப்பதற்காகவே வந்து போகிறார்கள். உலகநாயகன் கமலஹாசன் ஒரு வீடியோவில் ரசிகர்களிடமும் உரையாடிக் கொண்டிருக்கிறார் அதில் அவர் கூறியது தரமான படைப்புகளைத் தாங்கி பிடிக்க தமிழ் ரசிகர்கள் என்றும் மறந்ததில்லை.
அதுபோன்று விக்ரம் திரைப்படத்தின் மூலமாக தன்னையும் பட குழுவினரையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது எங்கள் பாக்கியம் அந்த வகையில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் மேலும் சில நிமிடங்கள் அரங்கையே அதிர வைத்த சூர்யா இதை அன்பிற்காக மட்டுமே செய்தார் அவருக்கு செலுத்தும் நன்றியை நாங்கள் இருவரும் இணையும் அடுத்த படத்தின் மூலமாக காட்ட இருக்கிறேன் என கூறியுள்ளார்.
அப்படிப் பார்த்தால் நிச்சயம் சூர்யா மற்றும் கமல் அடுத்த படத்தில் மிகப்பெரிய அளவிலான காட்சிகளில் வந்து போவார்கள் அது ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்டாக அமையும் என கூறப்படுகிறது மேலும் அடுத்த படத்திற்காக சூர்யா 40 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.